பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நேற்று மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இச்சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத் தலைப்புக்கள் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான நேற்று […]

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவிக்கையில், அன்றைய தினம் வேலைநிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று (23) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் அடையாள வேலைநிறுத்தத்துடன் கூடிய பாரிய ஆர்ப்பாட்டப் […]

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் கடந்த ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் குறைந்த மட்டத்தில் பதிவாகியுள்ளது. இன்று காலை 6 .30 மணியளவில் வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.45 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 3.5% வீழ்ச்சியாகும். அதேபோல், பிரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 89.63 அமெரிக்க டொலர்கள் வரை […]

இடைக்காலக் கொடுப்பனவு தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி நேற்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்தவொரு சங்கத்திற்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். எவ்வாறாயினும், இந்தப் போராட்டங்கள் எந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அரச சேவை வரலாற்றில் மிக […]

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை என்பது தேசிய மகளிர் நலன்புரி ஆய்வின் (National Women’s Wellbeing Survey) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு அறிக்கையின்படி, துணையைக் கொண்டிருந்த பெண்களில் ஐந்து பேரில் இருவர் (39.8%) தமது வாழ்நாளில் உடல், பாலியல், உளவியல் அல்லது பொருளாதார ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஐந்து பேரில் ஒருவர் (20.4%) […]