யாழ்ப்பாணம், தென்மராட்சி சாவகச்சேரியில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவப் பராமரிப்பு மற்றும் மன ஆறுதல் வழங்கும் ‘ஆறுதல்’ வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இல்லத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
20 தனித்தனி அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லம், நோயாளிகளின் வலியைக் குறைத்து, கண்ணியத்துடனும் அமைதியுடனும் வாழ்வின் இறுதிக்கட்டத்தைக் கழிக்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.