இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையானது தமிழ் மக்களின் அடிப்படை உரிமையாகும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்தும் அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தியாகதீபம் திலீபனின் சிலை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
பொலிஸ்விசாரணைகள் மூலம் எங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
கடந்த வருடம் அமைச்சர் சந்திரசேகரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனும் குறித்த சிலைக்கு மாலை அணிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நினைவேந்தலை சட்டவிரோத செயல் என காண்பித்து ஒடுக்க அடக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இறந்தவர்களை நினைவுகூருவது தமிழ் மக்களின் அடிப்படை உரிமையாகும் என அவர் தெரிவித்தார்.