சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் இருந்து கொழும்புக்கான தனது நேரடி விமானச் சேவையை British Airways நிறுவனம் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 24 அன்று கொழும்பு வந்தடைந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விழாக்கால விமானத்தில் இலங்கை பின்னணியைக் கொண்ட 3 திறமையான பணியாளர்கள் ஒன்றாகக் கடமையாற்றியுள்ளனர்.
இரு இணை விமானிகள் இந்த பிரம்மாண்ட விமானத்தை இயக்கிய இரு ஃபர்ஸ்ட் ஆபிஸர்களும் இலங்கைத் தொடர்பைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது! இதில் ஒருவரான ஃபர்ஸ்ட் ஆபீசர் பிரதீப் விமல்ராஜ், இலங்கையில் பிறந்து தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு ஈழத்தமிழர் ஆவார்!
செயல்பாட்டு மேற்பார்வையாளர் விமானத்தினுள் பயணிகளுக்கான சேவைகளை வழிநடத்திய கேபின் க்ரூ மேற்பார்வையாளரிலும் ஒரு பெண் அதிகாரி இலங்கைத் தொடர்பைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.