கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கும் கடும் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள “அக்வான்” (Akvan) சூறாவளியானது, இன்று (18) அதிகாலை 2.30 அயளவில் வட அகலாங்கு 12.6° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.6° இற்கு அருகில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்தத் தொகுதியானது மேலும் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து,  மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் “வலுவான சூறாவளியாக” மேலும் தீவிரமடையக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது.

அதனைத் தொடர்ந்து, இத்தொகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (19) பி.ப 05.30 அளவில் ‘’கடுமையான புயலாக” மேலும் தீவிரமடையும் என்பதுடன், நாளை மறுதினம் (20)கடுமையான புயலாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழையக்கூடும்.

எனவே, வடக்கு  அகலாங்கு 06 முதல் 19 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் உள்ள கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இக்கடல் பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால எதிர்வுகூறல்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மழை நிலைமை

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழைோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடல் பகுதிகளில் பிரதானமாக மழை வீழ்ச்சியற்ற காலநிலை நிலவும்.

காற்று

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 – 40 கி.மீ வரை இருக்கும்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது​ இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 கி.மீ வரை அதிகரிக்கலாம்.

நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

கடலின் தன்மை

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் இடைக்கிடையே சற்று கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இக்கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் (மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வேகத்தில்), அப்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்  என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

strike

நாளை பல அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் போராட்டம்

November 22, 2026

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளைய தினம் (23) அரச சேவையின் பல

jaff

யாழ்.பல்கலை மாணவர் மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்

November 22, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

arr

பாதசாரி மீது தாக்குதல் நடத்திய ஜீப் சாரதி கைது

November 22, 2026

கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் பாதசாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டி சாரதி

MediaFile_20261122_060307_911

நகை உற்பத்தி நிலையத்தில் திருட்டு!

November 22, 2026

ஹட்டன் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இயங்கிவரும் தங்க ஆபரண உற்பத்தி நிலையம் ஒன்றில் நேற்று (21)திருட்டுச்

ra

அரசியல் குழு மோதல்: பிரித்தானியாவை சர்ச்சைகளுக்குரிய களமாக மாற்றக்கூடாது – அரசியல் விமர்சகர் ரகிப் எஹ்சான்

November 22, 2026

கிழக்கு லண்டனில் பங்களாதேஷைச் சேர்ந்த போட்டி அரசியல் குழுக்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல்கள், பிரித்தானியாவில் சமூக ஒருங்கிணைப்பு மற்றும்

den

டெங்கு பரவல் வவுனியாவில் அதிகரிப்பு!

November 22, 2026

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத்

cyb

இலங்கையுடன் இணையும் அமெரிக்கா; இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்தத்திட்டம்?

November 22, 2026

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை

Pra

இலங்கையின் புனிதப் பிரதேசத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – பிரபாத் சந்திரகீர்த்தி

November 22, 2026

த்த மரபுரிமைகளையும் தொல்பொருள் பெறுமதிகளையும் பாதுகாத்து அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புனிதப்

vi

இலங்கை எப்படி இருக்கிறது? விண்வெளியிலிருந்து நாசா வீரர் புகைப்படம் பகிர்வு!

November 22, 2026

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் கண்கவர் புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன்

WhatsApp Image 2026-11-21 at 13.50.11

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேட்பாளருக்கு பிரிட்டன், பிரான்ஸ் வீட்டோ எதிர்ப்பு!

November 22, 2026

சூடானில் இடம்பெறும் கொடூரங்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரைத்

gelem

ரஷ்ய ஜனாதிபதி ஒரு ‘கொலையாளி’ – உக்ரைன் ஜனாதிபதி

November 22, 2026

சீனாவில் இந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தனது “நண்பர்” என அமெரிக்க ஜனாதிபதி

rum

ஐரோப்பாவில் மண் சரிவில் சிக்கிய 2 இலங்கைத் தொழிலாளர்கள்; ஒருவர் சடலமாக மீட்பு!

November 22, 2026

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் Găneasa பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய இரண்டு இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில்