இலங்கையின் புனிதப் பிரதேசத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – பிரபாத் சந்திரகீர்த்தி

த்த மரபுரிமைகளையும் தொல்பொருள் பெறுமதிகளையும் பாதுகாத்து அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புனிதப் பிரதேசத்தில் இராமர் கோயில் அமைப்பதற்கான எந்தவொரு திட்டமும் இல்லையென ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முன்மொழியப்பட்ட அநுராதபுரம் புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை (20) கண்டிக்கு விஜயம் செய்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற அதிகாரிகள் குழுவினர், மல்வத்து பீடத்தின் மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற அதிகாரிகள், அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தின் தொல்பொருள் பெறுமதிகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

அத்துடன், அநுராதபுரம் அட்டமஸ்தானங்களைத் தரிசிப்பதற்காக நாளாந்தம் வருகை தரும் உபாசகர்கள் மற்றும் உபாசகைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பக்தர்களுக்கான சுகாதார வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் அவசியம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், புனிதப் பிரதேசத்தின் வரலாற்று மற்றும் சமய முக்கியத்துவத்தைப் பாதிக்காத வகையில் அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர்,

இவ்வாறானதொரு உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பதற்காக அதிகாரிகள் வருகை தந்தமை வரவேற்கத்தக்கது. அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தின் மேல் மாளிகைப் பகுதியில் எவ்விதமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. மணல் முற்றங்களிலும் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சமூகத்துக்கு உரிய முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கட்டமாகவும் மக்களுக்கு விளக்கமளித்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால், தற்போதைய சர்ச்சைகளில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்திருக்க முடியும். உணர்வுபூர்வமான விடயங்களில் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவதே மிகவும் பொருத்தமானது எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் தொல்பொருள் பிரதேசத்தில் எந்தவொரு ராமர் கோயிலையும் நிர்மாணிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை. அவ்வாறான தகவல்கள் முற்றிலும் தவறானவையாகும். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக ஜனாதிபதி 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

அதேபோன்று, இந்திய அரசாங்கத்தின் ஊடாக ஏதேனும் வகையில் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள முடியுமாயின் அதனைப் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்ப்பில்லை என்ற நிலைப்பாட்டை மாநாயக்க தேரர் வெளிப்படுத்தினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பௌத்த மதத்தின் மீது மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர் என்பதால், இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் மாநாயக்க தேரர் தெரிவித்தார்.

பௌத்த மரபுரிமைகளையும் தொல்பொருள் பெறுமதிகளையும் பாதுகாப்பதுடன், புனிதப் பிரதேசத்துக்கு வழிபாட்டுக்காக வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதே அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.

ra

அரசியல் குழு மோதல்: பிரித்தானியாவை சர்ச்சைகளுக்குரிய களமாக மாற்றக்கூடாது – அரசியல் விமர்சகர் ரகிப் எஹ்சான்

November 22, 2026

கிழக்கு லண்டனில் பங்களாதேஷைச் சேர்ந்த போட்டி அரசியல் குழுக்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல்கள், பிரித்தானியாவில் சமூக ஒருங்கிணைப்பு மற்றும்

den

டெங்கு பரவல் வவுனியாவில் அதிகரிப்பு!

November 22, 2026

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத்

cyb

இலங்கையுடன் இணையும் அமெரிக்கா; இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்தத்திட்டம்?

November 22, 2026

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை

Pra

இலங்கையின் புனிதப் பிரதேசத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – பிரபாத் சந்திரகீர்த்தி

November 22, 2026

த்த மரபுரிமைகளையும் தொல்பொருள் பெறுமதிகளையும் பாதுகாத்து அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புனிதப்

vi

இலங்கை எப்படி இருக்கிறது? விண்வெளியிலிருந்து நாசா வீரர் புகைப்படம் பகிர்வு!

November 22, 2026

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் கண்கவர் புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன்

WhatsApp Image 2026-11-21 at 13.50.11

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேட்பாளருக்கு பிரிட்டன், பிரான்ஸ் வீட்டோ எதிர்ப்பு!

November 22, 2026

சூடானில் இடம்பெறும் கொடூரங்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரைத்

gelem

ரஷ்ய ஜனாதிபதி ஒரு ‘கொலையாளி’ – உக்ரைன் ஜனாதிபதி

November 22, 2026

சீனாவில் இந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தனது “நண்பர்” என அமெரிக்க ஜனாதிபதி

rum

ஐரோப்பாவில் மண் சரிவில் சிக்கிய 2 இலங்கைத் தொழிலாளர்கள்; ஒருவர் சடலமாக மீட்பு!

November 22, 2026

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் Găneasa பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய இரண்டு இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில்

Parliament

பாராளுமன்றில் செலவுத் தலைப்புகள் நிறைவேற்றம்!

November 22, 2026

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று(21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம்

IMG_2342

பிள்ளையானிற்கு விடுதலை இல்லை

November 21, 2026

பிள்ளையானை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும்

IMG_2341

மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம்

November 21, 2026

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு

IMG_2325

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல்

November 21, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதல்