அரசியல் குழு மோதல்: பிரித்தானியாவை சர்ச்சைகளுக்குரிய களமாக மாற்றக்கூடாது – அரசியல் விமர்சகர் ரகிப் எஹ்சான்

கிழக்கு லண்டனில் பங்களாதேஷைச் சேர்ந்த போட்டி அரசியல் குழுக்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல்கள், பிரித்தானியாவில் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளன. வெளிநாடுகளின் அரசியல் முரண்பாடுகள் பிரித்தானியாவின் வீதிகளில் வன்முறையாக வெளிப்படுவதை அனுமதிக்கக்கூடாது என அரசியல் விமர்சகர் Rakib Ehsan வலியுறுத்தியுள்ளார். GB News ஊடகத்தில் வெளியான தனது கருத்துக் கட்டுரையில், கிழக்கு லண்டனில் பங்களாதேஷ் அரசியல் குழுக்களுக்கிடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் அண்மைய மோதல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய சமூகத்துடன் […]
டெங்கு பரவல் வவுனியாவில் அதிகரிப்பு!
வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அபாயம் கொண்ட இந்நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் வளாகங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பழைய டயர்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், யோகட் கோப்பைகள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த வாளிகள் மற்றும் தகரக் கழிவுகள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீர் சேமித்து வைக்கும் […]
இலங்கையுடன் இணையும் அமெரிக்கா; இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்தத்திட்டம்?
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி , இணையவழி மோசடிகள் சர்வதேச குற்றவியல் வலையமைப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினிக்குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்ற விசாரணைப் பிரிவு பணியகத்தின் பிரதிநிதிகளையும் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் சந்தித்துள்ளனர். சர்வதேச […]
இலங்கையின் புனிதப் பிரதேசத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – பிரபாத் சந்திரகீர்த்தி

த்த மரபுரிமைகளையும் தொல்பொருள் பெறுமதிகளையும் பாதுகாத்து அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புனிதப் பிரதேசத்தில் இராமர் கோயில் அமைப்பதற்கான எந்தவொரு திட்டமும் இல்லையென ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முன்மொழியப்பட்ட அநுராதபுரம் புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை (20) கண்டிக்கு விஜயம் […]
இலங்கை எப்படி இருக்கிறது? விண்வெளியிலிருந்து நாசா வீரர் புகைப்படம் பகிர்வு!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் கண்கவர் புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் பகிர்ந்துள்ளார். இது விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்றத்தைக் காட்டுகிறது. அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தில், ஆழமான நீல நிற இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவும், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மேகக் கூட்டங்களும், இந்தியாவின் தென்முனையும் தெளிவாகத் தெரிகின்றன. பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் புகைப்படம், […]
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேட்பாளருக்கு பிரிட்டன், பிரான்ஸ் வீட்டோ எதிர்ப்பு!

சூடானில் இடம்பெறும் கொடூரங்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரியைப் பிரிட்டனும் பிரான்ஸும் நடைமுறை ரீதியில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளதாக நம்பப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தலைமை இராஜதந்திரியைத் தெரிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச் சபையின் ஒன்பதாவது முறைசாரா வாக்கெடுப்பிலும் எந்தவொரு வேட்பாளரும் இறுதி செய்யப்படாத நிலையில், இத்தேர்வு தொடர்ந்தும் இழுபறியிலேயே […]
ரஷ்ய ஜனாதிபதி ஒரு ‘கொலையாளி’ – உக்ரைன் ஜனாதிபதி

சீனாவில் இந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தனது “நண்பர்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டதற்குப் பதிலளித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புடின் ஒரு “கொலையாளி” எனத் தெரிவித்துள்ளார். சி.என்.என் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில், “புடினை எவ்வாறு அழைப்பது என்பது அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பம்; ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு எதிரி… எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு கொலையாளி” என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். சீன […]
ஐரோப்பாவில் மண் சரிவில் சிக்கிய 2 இலங்கைத் தொழிலாளர்கள்; ஒருவர் சடலமாக மீட்பு!

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் Găneasa பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய இரண்டு இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 46 மற்றும் 48 வயதுடைய இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது, ஆறு மீட்டர் ஆழமுள்ள குழியின் மண் திட்டு திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. மண் சரிவு ஏற்பட்டதும் இருவரும் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. மீட்புப் பணியின் போது மண் […]
பாராளுமன்றில் செலவுத் தலைப்புகள் நிறைவேற்றம்!
2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று(21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 21 விசேட செலவின அலகுகளின் செலவுத் தலைப்புகள், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், அமைச்சரவை அலுவலகம், அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம், நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நிர்வாக மேன்முறையீட்டு நியாயச்சபை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான […]