“காவிரி விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொய்ப் பிரசாரம்!” – துரை வைகோ குற்றச்சாட்டு!
கோவை: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ள நிலையில், கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மிகக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். பொய்யான தகவல்: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துப் பேசி அமைச்சர் டி.கே.சிவக்குமார் பொய்யான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருகிறார். பிரதமர் […]
“சாட்டை துரைமுருகன் மீது வழக்கு அடக்குமுறையின் உச்சம்!” – தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சம் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது: இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே தவிர, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காகவே துரைமுருகன் […]
பூமியில் இருந்து ஒரு ஒளி நாள் தூரத்தைக் கடந்த Voyager -1 விண்கலம்!

மனித வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது மனிதர்களுக்கு எப்போதுமே வானம், நட்சத்திரங்கள், விண்வெளி, பிரபஞ்சம் பற்றி ஆர்வமும், கேள்விகளும் இருந்து கொண்டேதான் இருந்தது என்பது நமக்கு தெரியவருகிறது. பண்டைய கிரேக்க, எகிப்திய, சீன மற்றும் இந்திய மக்கள் தங்களது இதிகாசங்களிலும், புராணக் கதைகளிலும் ஏராளமான வானியல் நிகழ்வுகள் குறித்து பதிவு செய்துள்ளனர். தொழில்நுட்பம் வளரத் தொடங்கிய பிறகு விண்வெளி ஆய்வும் பல கட்டங்களாக முன்னேறியது. தொலைநோக்கி கண்டறியப்பட்ட பிறகு நமது சூரியக் குடும்பம் பற்றிய தெளிவு நமக்கு […]
தரமற்ற உணவுப் பொருட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நாட்டில் சிறுவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கும், அவற்றை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தமிழரசுக் கட்சி. சத்தியலிங்கம் எம்பி பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மனித நுகர்வுக்குப் […]
குருந்தூர்மலையில் 300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிவை?

குருந்தூர்மலையில் 1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 78ஏக்கர் நிலம் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் குறித்த 78 ஏக்கர் நிலத்திற்கு வெளியிலும் தொல்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்,மேலும் 229ஏக்கர் நிலப்பரப்பை பேணப்பட்ட தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தும் நோக்கில் எல்லைக்கல் இடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் மொத்தமாக 300ஏக்கருக்கும் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிய காணிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரியின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா […]
தடை செய்யப்பட்டுள்ள 40,000 புனித குர்ஆன் பிரதிகள் 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடைகளையும் நீக்க நடவடிக்கை?

தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் 40,000 ஆயிரம் புனித குர்ஆன் பிரதிகளையும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளையும் நீக்குவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் […]
“கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள்!” – கனிமொழி எம்.பி. கடும் குற்றச்சாட்டு!
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் அமைச்சர்களே அழுத்தம் கொடுப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியருக்கு அழுத்தம்: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆட்சியரை அழைத்து மன்னிப்பு கேட்டுக்கொண்ட அமைச்சர்களே இன்று திமுகவை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள் என்றார். நடந்த சம்பவம் குறித்து ஆட்சியர் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அழுத்தம் தரப்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளதாகவும், மக்கள் கண்காணிப்புக் குழு […]
“தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர்” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி!

புதுக்கோட்டை: தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தவெக அரசு, காங்கிரஸ் கட்சி, வைகோ உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கருத்து தெரிவித்தார். குதிரை பேரம் தேவையில்லை: புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, குதிரை பேரத்தில் ஈடுபடுவது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரகுபதி பதிலளித்தார். அப்போது அவர், திமுகவுக்கு குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் […]
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கு, கோப்பாய் பகுதியில் மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமை தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (19.11.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“அழைப்பிதழ் வரவில்லை, வாழ்த்துக் கடிதம் எழுதினேன்” – ராகுல் காந்தி அழைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பதில்!

சென்னை: சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக ராகுல் காந்தியிடம் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கூட்டணி முறிவு: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு முன்பிருந்தே தொகுதி பங்கீட்டில் குழப்பம் நீடித்து வந்தது. தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது. பின்னர் தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ், தவெக அரசில் அமைச்சர் […]