“அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!” – சம்மனை ஏற்று விசாரணைக்கு வந்த சி.விஜயபாஸ்கர்!

சென்னை: அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கு: தவெக புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருந்து வரும் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. அப்போது அவர் மீது வருமானத்துக்கு […]

“வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்!” – சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல்!

சென்னை: வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். வழக்குப்பதிவு பின்னணி: கடந்த 2011-2015 ஆம் ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறையின் பணி நியமனங்களைப் பணம் பெற்றுக் கொண்டு நிரப்பியதாக மத்திய குற்றப் பிரிவு […]

ராஜாங்கனை சத்தாரதன தேரர் விளக்கமறியலில்

அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று (18) மாலை அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதான ஏனைய மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வரலாற்று ஆசிரியர்கள் உள்ளீர்ப்பு குறித்து சந்திப்பு

தொல்லியல் பட்டதாரிகளையும் வரலாறுபாட ஆசிரியர்களாக உள்ளீர்ப்புச் செய்வது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வலியுறுத்தினார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வள பற்றாக்குறை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எடுத்துரைத்தார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், ஆகியோர் இன்று புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் […]

ராமேஸ்வரம் – தலைமன்னார் திட்டத்துக்கு நிதியுதவி கோரிக்கை!

ராமேஸ்வரம் – தலைமன்னார் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை உள்ளிட்ட ஐந்து முக்கிய கடல்சார் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்திய மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது. புதுடெல்லியில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவாலைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மொத்தம் 9,600 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார். இதில் ராமேஸ்வரம் – தலைமன்னார் சேவை திட்டத்தின் கீழ், 118 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் ராமேஸ்வரம் […]

200 முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

பிபிசி, எச்.எஸ்.பி.சி ஐக்கிய அரபு அமீரக வங்கி, ஏர் பிரான்ஸ் மற்றும் ஐகியா உட்பட உலகின் சுமார் 200 முன்னணி இணையதளங்கள் மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் தமது பயனர்களின் இணைய அனுபவத்தைத் தனிப்பயனாக்கப் பயன்படுத்தும் ‘ஒப்டிமைஸ்லி’ எனும் டிஜிட்டல் தளத்தின் கருவிகளுக்குள் ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் ஜாவாஸ்கிரிப்ட் குறியீட்டைப் புகுத்தியுள்ளனர். இதன் மூலம் சுமார் 178 இணையதளங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. பயனர்களின் கடன் அட்டை இலக்கங்கள், […]

நூலக சேவையை பசுமையாக்குவது தொடர்பான விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

நூலக சேவையைப் பசுமைமயமாக்குதல் மற்றும் நூலக அமைப்பு ஊடாக சிறுவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொதுமக்களின் சுற்றுச்சூழல் அறிவு, மனப்பான்மைகள் மற்றும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (18) மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் இலங்கை நூலக சங்கமும் இணைந்து இந்த விசேட சுற்றுச்சூழல் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன. நூலகர்களுக்காக நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் நாடு முழுவதிலுமிருந்து 100 க்கும் மேற்பட்ட நூலகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது, தேசிய சுற்றுச்சூழல் சட்டம் […]

நக்கிள்ஸ் சம்பவம்: சிறுமிக்கு கல்வி மற்றும் உளவியல் சமூக ஆலோசனை

நக்கிள்ஸ் சம்பவத்திற்கு முகம்கொடுத்த சிறுமிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான தேவையான உளவியல் சமூக ஆலோசனை ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக இவ்வாறான உதவிகளை வழங்குமாறு குறித்த அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த சிறுமியின் கட்டாயக் கல்வி வயது பூர்த்தியடையும் வரை அல்லது அவரது விருப்பத்திற்கேற்ப உயர் கல்வி அல்லது […]

பாதுகாப்புச் செயலர் யாழில் இராணுவச் செயற்பாடுகளை ஆராய்வு

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா நேற்று (17) பலாலியில் அமைந்துள்ள யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு (SFHQ-J) விஜயம் செய்தார். இதன்போது, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன மற்றும் வடக்கு பிராந்தியத்திலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது, வடக்கு பிராந்தியத்தில் இராணுவத்தின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் விரிவாக ஆய்வு செய்ததுடன், மூலோபாயத் தேவைகள், வழங்கல் ஏற்பாடுகள், படையினரின் நலன்புரி […]

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இழுபறி: ஆசிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாமல் இழுபறியில் உள்ள நிலையில், ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே ஆசியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பிலிப்பைன்ஸுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்ததுடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தையையும் நடத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவின் முக்கியத் துறைகள் மீது விதித்துள்ள […]