தடை செய்யப்பட்டுள்ள 40,000 புனித குர்ஆன் பிரதிகள் 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடைகளையும் நீக்க நடவடிக்கை?

தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் 40,000 ஆயிரம் புனித குர்ஆன் பிரதிகளையும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளையும் நீக்குவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு முஸ்லிம் சமூகம் வாக்களிக்கவில்லை என்பதற்காகவே கொரோனா தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்ததுடன் முஸ்லிம்களுக்கான புனித குர்ஆன் 40,000 ஆயிரம் பிரதிகளை தடை செய்து முஸ்லிம் கலாசார திணைக்களத்திடம் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்துள்ள 83 அறபுக்கல்லூரிகளின் பதிவுகளையும் தடை செய்தார்.

ஆனால் முஸ்லிம் சமூகம் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி ஆனால் தடைசெய்யப்பட்டுள்ள புனித குர்ஆன்களையும், 83 அறபுக்கல்லூரிகளின் தடைகளையும் நீக்குவார் என எதிர்பார்த்து 02 வருடங்கள் சென்ற நிலையிலும் தங்களின் புனிதமான 40,000 குர்ஆன் பிரதிகளும், 83 அறபுக்கல்லூரிகளின் பதிவுகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை என எமது முஸ்லிம் சமூகம் மிகவும் கவலையடைந்திருக்கின்றது.

அமைச்சர் சுனில் செனவி சகல இனங்கள் மத்தியிலும் நீதி நியாயமாக செயற்பட்டு வருவது குறித்து நாங்கள் அவரை பாராட்டுகிறோம். எமது முஸ்லிம் மக்களின் புனித குர்ஆன்களையும், 83 அரபுக் கல்லூரிகளின் தடைகளையும் நீக்குவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பில் எமது முஸ்லிம் சமூகத்தின் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் ஜம்மிய்யத்துல் உலமா, சூரா சபை, முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் அமைப்பினர் என முழு சமூகமும் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் பிரதி அமைச்சரிடமும் பல தடவைகள் ஒற்றுமைப்பட்டு கோரிக்கை விடுத்தும் இதுவரையும் எமது புனித குர்ஆன்களையும் 83 அறபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளும் நீக்கப்படவில்லை.

எனவே, புனித றமழான் மாதம் நெருங்கிக் கொண்டிருப்பதால் விரைவாக எமது குர்ஆன்களை விடுவிப்பதுடன் 83 அறபுக் கல்லூரிகளின் பதிவுகளுக்காக விதிக்கப்பட்டுள்ள தடைகளும் நீக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொகிறேன் என்றார்.

இது விடயமாக அமைச்சர் ஹினிதும சுனில் செனவி கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் புனித குர்ஆன்களை விடுவிக்குமாறு முஸ்லிம் சமூகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்டகாலமாக என்னிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இது தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் பதிலளித்துமுள்ளேன். எனவே முஸ்லிம்களின் புனித குர்ஆன்களையும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளையும் நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

1200-675-25117691-thumbnail-16x9-vaiko-aspera

“காவிரி விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொய்ப் பிரசாரம்!” – துரை வைகோ குற்றச்சாட்டு!

November 18, 2026

கோவை: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ள

202508173484034

“சாட்டை துரைமுருகன் மீது வழக்கு அடக்குமுறையின் உச்சம்!” – தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

November 18, 2026

சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தவெக அரசின் செயல்

photo-collage.png (1)

பூமியில் இருந்து ஒரு ஒளி நாள் தூரத்தைக் கடந்த Voyager -1 விண்கலம்!

November 18, 2026

மனித வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது மனிதர்களுக்கு எப்போதுமே வானம், நட்சத்திரங்கள், விண்வெளி, பிரபஞ்சம் பற்றி ஆர்வமும், கேள்விகளும் இருந்து

nalintha-1 (1)

தரமற்ற உணவுப் பொருட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

November 18, 2026

நாட்டில் சிறுவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கும், அவற்றை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட

kuru

குருந்தூர்மலையில் 300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிவை?

November 18, 2026

குருந்தூர்மலையில் 1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 78ஏக்கர் நிலம் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம்

sun

தடை செய்யப்பட்டுள்ள 40,000 புனித குர்ஆன் பிரதிகள் 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடைகளையும் நீக்க நடவடிக்கை?

November 18, 2026

தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் 40,000 ஆயிரம் புனித குர்ஆன் பிரதிகளையும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளையும் நீக்குவதற்கான அவசர

1200-675-18564993-thumbnail-16x9-dmk

“கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள்!” – கனிமொழி எம்.பி. கடும் குற்றச்சாட்டு!

November 18, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் அமைச்சர்களே அழுத்தம் கொடுப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியருக்கு அழுத்தம்:

5

“தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர்” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி!

November 18, 2026

புதுக்கோட்டை: தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி

gajendran

நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

November 18, 2026

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கு, கோப்பாய் பகுதியில் மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை

4

“அழைப்பிதழ் வரவில்லை, வாழ்த்துக் கடிதம் எழுதினேன்” – ராகுல் காந்தி அழைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பதில்!

November 18, 2026

சென்னை: சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக ராகுல் காந்தியிடம் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு

images (75) - Copy

“அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!” – சம்மனை ஏற்று விசாரணைக்கு வந்த சி.விஜயபாஸ்கர்!

November 18, 2026

சென்னை: அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள்

1683252-senthil-balaji

“வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்!” – சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல்!

November 18, 2026

சென்னை: வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்