இஸ்லாமிய மதத்தை நிந்தித்து கருத்து பதிவு செய்தமைக்காக சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் தாயார் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது மகனை காப்பாற்ற முன்வரவேண்டும் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அனோஜனின் தாயார் அந்த உருக்கமான வேண்டுகோளில் தெரிவித்துள்ளதாவது
எனது மகன் அறியாமல் செய்த தவறை மன்னித்து இலங்கை அரசு மற்றும் ஜனாதிபதி தலையிட்டு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுத்து அனோஜனின் உயிரை காப்பாற்றி நாட்டிற்கு அழைத்து வர உதவவேண்டும்
என்னுடைய மகனை ஒன்றும் செய்யாதீர்கள் நாங்கள் மகனை கஷ்டப்பட்டு தான் வளர்த்தோம் நாங்கள் அவனை நம்பித்தான் இருக்கின்றோம் எனது மகனை விடுவித்து தாங்கள் என ஜனாதிபதியிடம் கைகூப்பி மன்றாடிக்கேட்கின்றோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.