மா*வீரர் நாள் இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் (நவம்பர் 27) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் கோப்பாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக மா*வீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட நிலையில், வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளின் கல்வெட்டுக்கள் நினைவுச்சின்னங்களாகப் பேணப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக இந்த நினைவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள மா*வீரர் நாள் பிரதான நிகழ்வில், மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெறவுள்ளது