பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கைக்கு நாடு கடத்தப்படும் குற்றவாளிகளுக்கு புதிய பொறிமுறை

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பில் உள்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியமும், அதனால் நியமிக்கப்பட்ட உபகுழுவும் விசேட கவனம் செலுத்தியுள்ளன.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் ஒருங்கிணைப்புப் பிரச்சினைகள் மற்றும் தொடர்பாடல் தடைகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அத்துடன் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையிலும், ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதன் இணைத் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சமன்மலி குணசிங்க அவர்களின் தலைமையிலும் கடந்த (23) ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியிருந்தன.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்களின் முந்தைய குற்றப் பதிவுகள் தொடர்பில் இலங்கையின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படாததன் காரணமாக, அவர்கள் சாதாரண நபர்களைப் போன்று சமூகத்தில் நடமாடுவதற்கு வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக அவர்கள் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்கான ஆபத்து காணப்படுவதால், வெளிநாட்டு நீதிமன்றங்களினால் வழங்கப்படும் இவ்வாறான தீர்ப்புகளை இலங்கையில் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அதற்கமைய, பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது:

வெளிநாடுகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு முறைமையொன்றை உருவாக்குதல்.
அவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்களைப் பொலிஸ் குற்றப் பதிவுக் கட்டமைப்பில் உள்ளடக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்.
சிறுவர்களுடன் தொடர்புபட்டுப் பணியாற்றும் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்போது கட்டாயப் பின்னணிப் பரிசோதனையை மேற்கொள்ளுதல்.
மீண்டும் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக இடர் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட சட்டபூர்வமான கண்காணிப்பு முறைமையொன்றை உருவாக்குதல் மற்றும் இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
மேலும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, நன்னடத்தைப் பராமரிப்பின் கீழுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை, சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் ஊடாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது தொடர்பான மருத்துவ அறிக்கை மற்றும் நடத்தை தொடர்பான அறிக்கையொன்றைப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன், மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படும் நன்னடத்தை நிறுவனங்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அந்நிறுவனங்களின் பிரதான பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும்போது, நன்னடத்தைச் சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், 2005-ஆம் ஆண்டின் 34-ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுக்கும் சட்டம் மற்றும் 1999-ஆம் ஆண்டின் 37-ஆம் இலக்க பராமரிப்புச் சட்டம் உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குத் தொடர்புடைய சட்டங்களைத் துரிதமாகத் திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக நீதிமன்றத் தீர்ப்புகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் சாத்தியமான விரைவான தீர்வுகளையும் முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் கௌரவ உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி லக்மாலி கமகே, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன மற்றும் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம், இலங்கைப் பொலிஸ் மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ravikaran11

பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் – கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி

November 26, 2026

பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைக்கூடத் தடுக்கும் உங்களால் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்களென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

gajendra

ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்

November 26, 2026

விடுதலைப் புலிகள் அமைப்பும், ஜே.வி.பி.யும் ஆயுதமேந்திப் போராடியவர்கள் என்றாலும், இனவாதத்தின் அடிப்படையில் அவர்களை இந்த அரசாங்கம் உள்ளிட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள்

dsfs2

பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கைக்கு நாடு கடத்தப்படும் குற்றவாளிகளுக்கு புதிய பொறிமுறை

November 26, 2026

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பில் உள்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன்

piere polli

வெயின்ரைட் தளத்தில் தன்னுடன் புகைப்படம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தாதியொருவர் வேலையை இழக்க நேரிடலாம் என பொய்லியேவ் குற்றச்சாட்டு

November 26, 2026

வெயின்ரைட் தளத்தில் தன்னுடன் புகைப்படம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தாதியொருவர் வேலையை இழக்க நேரிடலாம் என பொய்லியேவ் குற்றச்சாட்டு ஒட்டாவா, நவம்பர்

on

மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் – இலங்கை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

November 26, 2026

ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

fdsf

இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

November 26, 2026

இலங்கை வர்த்தக நிறுவனங்கள் வெளிநாட்டு நாணய மாற்று விகித அபாயங்களைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் புதிய

பலாங்கொடை காஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கு பிணை

November 26, 2026

ருவான்வெலி மகாசாய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை காஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11

us

அமெரிக்கா அறிவித்துள்ள புதிய சுற்று வரி விதிப்பு நடவடிக்கைகளிலிருந்து இலங்கை விலக்கல்!

November 26, 2026

சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளை இலக்கு வைத்து

sam

சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் இறுதிச் சுற்றுக்கு சம்மாந்துறை மாணவி!

November 26, 2026

சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் – 2026 (International English Olympiad – IEO) போட்டியின் முதலாம் சுற்றில் சிறந்த பெறுபேற்றைப்

Diana

குற்றத்தை ஒப்புக்கொண்டார் முன்னாள் எம்.பி. டயானா கமகே

November 26, 2026

சரியான விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) டயானா கமகே இன்று (26) கொழும்பு

kows

ஊடகத்துறையை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது – ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன கருத்து!

November 26, 2026

ஊடகச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தும்போது, அடிப்படை ஊடக ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதும் அவசியமாகும்; ஊடகத்துறையை எவ்வாறு

d

இலங்கையின் பாதாள உலகக் குழுவுக்கு வு-56 துப்பாக்கி வழங்கியவர் துபாயில் கைது!

November 26, 2026

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு, பொலிஸ் வீதித்தடையில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது தனது கடமை நேர T-56 ரக துப்பாக்கியைத் திருடி,