இந்த நவம்பர் மாதத்தில் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரம், கௌரவம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்காகத் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் உன்னத தியாகங்களை நாம் நெஞ்சில் நிறுத்துகிறோம்.
அவர்களின் வீரமும் தியாகமுமே இன்று ஐரோப்பா எங்கும் நாம் அனுபவிக்கும் பாதுகாப்பிற்கும் வாழ்க்கைக்கும் அடித்தளமாக அமைந்திருக்கின்றமையைக் கருத்திற்கொண்டு அனைவரும் இணைந்து எமது மாவீரர்களுக்கான அஞ்சலிகளைச் செலுத்துவோம் என அழைக்கப்பட்டுள்ளது.