செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை விஞ்ஞான ரீதியாகவே முன்னெடுக்கப்படுகின்றது – நீதியமைச்சர்

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பாக முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளும் விசாரணைகளும் முழுமையான நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், விஞ்ஞான ரீதியான முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் செம்மணி புதைகுழியில் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரை சுமார் 574 நபர்களுக்குரிய எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், யாழ்ப்பாணம் நீதவான், சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றம் இடம்பெற்ற இடத்தைப் பரிசோதிக்கும் அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் தொடர்ச்சியான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், 2025 ஏப்ரல் 29ஆம் திகதிய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் (OMP) பார்வையாளராக இச்செயற்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றது.

பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது, எலும்புக்கூட்டு எச்சங்கள் புதைக்கப்பட்டிருந்த தொல்லியல் சூழல் தொடர்பான தடயவியல் தொல்லியல் அறிக்கையே (Forensic Archaeological Report) தவிர, சட்ட வைத்திய அறிக்கை அல்ல என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள், நீதவானின் உத்தரவின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன் மற்றும் அவரது குழுவினரால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மேம்பட்ட DNA பகுப்பாய்வு வசதிகள் தற்போது இல்லாத காரணத்தினால், நீதிமன்றம் உத்தரவிடும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்களை அடையாளம் காண்பதற்கும் DNA பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மாதிரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும், சர்வதேச தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளது என அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இறுதியாகக் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதுமே அரசாங்கத்தின் ஒரே நோக்கமாகும் என வலியுறுத்தினார்.

இனம், மதம் அல்லது சாதி ஆகிய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாது சட்டத்திற்கு அமைவாக இந்த விசாரணைகள் நிறைவு செய்யப்படும் என்றும், இந்த உணர்வுபூர்வமான விடயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

strike

நாளை பல அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் போராட்டம்

November 22, 2026

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளைய தினம் (23) அரச சேவையின் பல

jaff

யாழ்.பல்கலை மாணவர் மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்

November 22, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

arr

பாதசாரி மீது தாக்குதல் நடத்திய ஜீப் சாரதி கைது

November 22, 2026

கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் பாதசாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டி சாரதி

MediaFile_20261122_060307_911

நகை உற்பத்தி நிலையத்தில் திருட்டு!

November 22, 2026

ஹட்டன் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இயங்கிவரும் தங்க ஆபரண உற்பத்தி நிலையம் ஒன்றில் நேற்று (21)திருட்டுச்

ra

அரசியல் குழு மோதல்: பிரித்தானியாவை சர்ச்சைகளுக்குரிய களமாக மாற்றக்கூடாது – அரசியல் விமர்சகர் ரகிப் எஹ்சான்

November 22, 2026

கிழக்கு லண்டனில் பங்களாதேஷைச் சேர்ந்த போட்டி அரசியல் குழுக்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல்கள், பிரித்தானியாவில் சமூக ஒருங்கிணைப்பு மற்றும்

den

டெங்கு பரவல் வவுனியாவில் அதிகரிப்பு!

November 22, 2026

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத்

cyb

இலங்கையுடன் இணையும் அமெரிக்கா; இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்தத்திட்டம்?

November 22, 2026

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை

Pra

இலங்கையின் புனிதப் பிரதேசத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – பிரபாத் சந்திரகீர்த்தி

November 22, 2026

த்த மரபுரிமைகளையும் தொல்பொருள் பெறுமதிகளையும் பாதுகாத்து அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புனிதப்

vi

இலங்கை எப்படி இருக்கிறது? விண்வெளியிலிருந்து நாசா வீரர் புகைப்படம் பகிர்வு!

November 22, 2026

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் கண்கவர் புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன்

WhatsApp Image 2026-11-21 at 13.50.11

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேட்பாளருக்கு பிரிட்டன், பிரான்ஸ் வீட்டோ எதிர்ப்பு!

November 22, 2026

சூடானில் இடம்பெறும் கொடூரங்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரைத்

gelem

ரஷ்ய ஜனாதிபதி ஒரு ‘கொலையாளி’ – உக்ரைன் ஜனாதிபதி

November 22, 2026

சீனாவில் இந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தனது “நண்பர்” என அமெரிக்க ஜனாதிபதி

rum

ஐரோப்பாவில் மண் சரிவில் சிக்கிய 2 இலங்கைத் தொழிலாளர்கள்; ஒருவர் சடலமாக மீட்பு!

November 22, 2026

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் Găneasa பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய இரண்டு இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில்