சென்னை:
மலேசியாவில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு இரண்டாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என அவர் வெளியிட்ட காணொலி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தமிழ்நாடு சமூக நீதித்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முக்கிய விவரங்கள்:
-
வழங்கப்பட்ட நிதி: மாணவர் பாரதிதாசனுக்கு இதுவரை முதலாம் ஆண்டுப் படிப்பிற்காக ரூ. 36 லட்சம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்காக ரூ. 12 லட்சம் என மொத்தம் ரூ. 48 லட்சம் உதவித்தொகை அரசால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
-
பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல்: மாணவர் தரப்பில் கோரப்பட்ட ரூ. 19.50 லட்சம் கூடுதல் செலவினம் தொடர்பாக, அவர் பயிலும் பல்கலைக்கழகத்தின் பரிந்துரையைக் கோரி கடந்த 17-ஆம் தேதியே அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் நகல் மாணவருக்கும் முறையாகப் பகிரப்பட்டுள்ளது.
-
நிதி விடுவிப்பதற்கான நிபந்தனை: பல்கலைக்கழகத்திடமிருந்து முறையான பதில் கிடைத்தவுடன், கோரப்பட்ட கல்வி உதவித்தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என்ற விவரமும் அந்த மின்னஞ்சல் மூலம் மாணவருக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அவப்பெயர் ஏற்படுத்தும் உள்நோக்கம்: பல்வேறு மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவித்தொகைத் திட்டங்கள் இதுவரை இல்லாத அளவில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனேயே இந்த காணொலியை அவர் வெளியிட்டுள்ளார்.
Hashtags:
#Bharathidasan #SocialJusticeDept #TVKGovt #AmbedkarFellowship #OverseasScholarship #TNPolitics #TamilNaduNews #BreakingNewsTamil