பான் இந்திய நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ ‘என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ரவி நீலகுடிட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தில் துல்கர் சல்மான்- பூஜா ஹெக்டே ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் மாந்தர்களான துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே பாடசாலையில் பயிலும் போது அணியும் சீருடையுடன் தோன்றுவதும்.. ‘மீண்டும் காதல் துளிர்க்கும்’ என்ற வாசகத்தை இடம்பெறச்செய்திருப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.