சென்னை:
தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு இடையே, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஆளுநர் அர்லேகரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 2018-ம் ஆண்டு கர்நாடக ஆளுநர் பாஜக-வை ஆட்சி அமைக்க அழைத்த கடிதத்தை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள அவர், அரசியலமைப்பு மரபுகளை ஆளுநர் மீறக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆளுநர் அர்லேகர் அவர்களே, 2018-ல் கர்நாடக ஆளுநர் அனுப்பிய இந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். அன்று தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவே உத்தரவிடப்பட்டது. ராஜ்பவனுக்குள் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் எடுக்கக் கூடாது. பெரும்பான்மையைச் சோதிப்பதற்கான ஒரே தளம் சட்டமன்றம் மட்டுமே. நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்டவராக இருக்கலாம், ஆனால் ஆளுநர் பதவியில் இருக்கும்போது அரசியலமைப்பைக் காப்பதே உங்கள் கடமை. ஜனநாயக மரபுகளைச் சீர்குலைக்க முயன்றால் தமிழக மக்கள் அதைத் தகுந்த முறையில் எதிர்ப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#GirishChodankar #Congress #TNGovernor #Arlekar #Vijay #TVK #BreakingNews #May8 #TamilNaduPolitics #KarnatakaPrecedent #ConstitutionalLaw #MajorityTest #ThalapathyVijay #VijayAsCM #Democracy #StalinVsVijay #ElectionResults2026 #NewGovernmentTN #AssemblyUpdate #VijayMakkalIyakkam_“`