ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு பீடத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு மேலும் உரையாற்றுகையில்,

இந்த ஆயுர்வேதப் பட்டதாரிகள், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவப் பீடம், கம்பஹா விக்கிரமராட்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவப் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பீடம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பீடம் ஆகியவற்றில் ஐந்தாண்டுப் பட்டப்படிப்பை முடித்து, 2017 – 2018 கல்வியாண்டுகளுக்குரிய பட்டபடிப்பை நிறைவு செய்தவர்கள் ஆவார்.

இந்தப் பட்டதாரிகள், சிறப்பு மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளின் பொறுப்பில் உள்ள முதல் தர மருத்துவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ், போதனா வைத்தியசாலைகள், ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்கள், மாகாண ஆயுர்வேதத் துறைகள் ஆகியவற்றில் ஓராண்டு காலத்திற்கு உள்ளகப் பயிற்சி பெற உள்ளனர்.

உள்ளகப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இவர்கள், ஆயுர்வேத மருத்துவ மன்றத்தில் ஆயுர்வேத மருத்துவராகப் பதிவு பெற வேண்டும். இந்தப் பயிற்சியாளர்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தால் மாதாந்திர உள்ளகப் பயிற்சி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த 402 பட்டதாரிகளில், 249 பேர் ஆயுர்வேதத் துறையிலும், 109 பேர் சித்தத் துறையிலும், 44 பேர் யுனானித் துறையிலும் உள்ளகப் பயிற்சி பெற உள்ளனர்.

நியமனங்களை வழங்கிய பின் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, நாடாக வளர்ச்சி அடைந்து வரும் இக்காலகட்டத்தில், நாட்டை முன்னேற்றுவதற்கு கடுமையான நிதி ஒழுக்கம் அவசியம்.

தித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய, வரிகளை உயர்த்தாமல் திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், இந்த ஆண்டு இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், இந்த நோக்கத்திற்காக சுமார் 2,000 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும், இதுவரையிலான நிதிநிலை அறிக்கை வரலாற்றில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் அதிகபட்சத் தொகையாக இது அமையும்.

அந்தப் பணம் சரியாகவும், இலக்கு நோக்கியும் செலவிடப்பட்டால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றும், நிதி நிர்வாகத்தில் இலக்குகளை அடைவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சமூகம் மாற்றியமைக்கப்படும் போது சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தவாறு செய்ய முடியாது எனவும், சுகாதார அமைச்சு பயிற்சியளித்தால், தேவைக்கேற்ப பயிற்சியளிக்கப்படும். அந்த தேவை தனித்தனியாக இருந்தாலும், உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பட்டதாரிகள் அனைவரும் சுகாதார அமைச்சில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

இந்த நிலைமையை இந்தக் குழு அனுபவித்து வருவதாகவும், மிகக் குறுகிய காலத்திற்குள் மேற்கத்திய மருத்துவப் பட்டதாரிகளும் இதே நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

அவர்களின் வெற்றிடங்கள் தற்போது நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், வெற்றிடங்களை அதிகரிக்க முயற்சித்தால் அதுவும் சில வருடங்களில் மட்டுப்படுத்தப்படும். எதிர்காலத்தில் காலி பணியிடங்களுக்கு வருபவர்கள் குறிப்பிட்ட அளவுகோல்களின்படி பணியில் சேர வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் நாயகம் திப்தி சுமனசேன, தேசிய சுதேச மருத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் இஷாஷா சதுரங்கயன மற்றும் மருத்துவ பட்டதாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது