“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் ட்ரம்ப்,

ஈரானால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அணு ஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது நல்லது. எனக்கு உலகத்திலுள்ள அத்தனை நேரமும் இருக்கிறது, ஆனால் ஈரானுக்கு அப்படியல்ல. கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது!.

ஈரானின் இராணுவ வலிமை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அந்நாட்டின் கடற்படை கடலின் அடியில் கிடப்பதாகவும், விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கிண்டல் செய்துள்ளார். “ஈரானியத் தலைவர்கள் இப்போது நம்முடன் இல்லை, எங்களது கடல் வழித் தரை முற்றாக இறுக்கப்பட்டுள்ளது. இனி நிலைமை மோசமாகுமே தவிர சரியாகாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ அறிக்கையின்படி, ஈரானை அணு ஆயுதக் கொள்கையில் அடிபணிய வைக்க, அந்நாட்டின் மீதான கடல் வழி முற்றுகையை நீண்ட காலத்திற்கு நீடிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட பூச்சியமாகியுள்ளது.

இந்த முற்றுகையினால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ள போதிலும், இது அமெரிக்காவில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை ட்ரம்ப் திடீரென இரத்து செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பதில் வொஷிங்டன் பிடிவாதமாக உள்ள நிலையில், அமெரிக்காவின் கடல் வழி முற்றுகையை அகற்றாமல் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெஹ்ரான் அறிவித்துள்ளது.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,