கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக எதிர்வரும் மே 1 ஆம் திகதி அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனைத்து தரப்பினரையும் ஆதரவு தந்துதவுமாறு கேப்பாபிலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பாக கேப்பாபிலவு மக்களால் நினைவூட்டல் கடிதம் ஒன்று புதன்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் அவர்களை சந்தித்து கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கேப்பாபிலவு மக்கள்,

கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக வாழ்விடத்தை கோரி அரசிடம் நீதி கேட்டு வருகின்றோம். கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் உபாலி சமரசிங்க தங்களை சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக சாதகமான முடிவை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். பல மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அவர் ஊடாக அமைச்சருக்கும் காணி விடுவிப்பு தொடர்பான நினைவூட்டல் கடிதம் ஒன்றினை கையளிக்க கேப்பாபிலவு மக்கள் சென்றிருந்தனர்.

அதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியபோது காணி விடுவிப்பு தொடர்பாக எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட காலத்தில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதாகவும், அக்குடும்பங்களுக்கு காணி மற்றும் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் கூறினர்.

அவர்களின் கூற்றுப்படி, ஏறத்தாழ 255 குடும்பங்களுக்கு சொந்த காணி மற்றும் மாற்றுக் காணி வழங்கப்பட்டுள்ள நிலையில், 55 குடும்பங்களுக்கு இதுவரை சொந்த காணி கிடைக்கவில்லை. மேலும், 11 குடும்பங்களுக்கு மாற்றுக் காணியும் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.

இவர்கள் வாழ்வாதாரமாக கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை நம்பியிருந்த போதிலும், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

“போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் மக்களின் வாழ்விடத்தில் இன்னும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் காணி அபகரிப்பு தொடர்வது தேவையற்ற ஒன்று. ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு மக்களின் காணியை மக்களுக்கே மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தமது வாழ்வாதாரங்களும் தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வருகின்ற மே மாதம் 1ஆம் திகதி தொழிலாளர் தினத்தன்று கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருவதாகவும், பல மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாறிய போதிலும் தாங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை வந்து நில விடுவிப்பு குறித்து தொடர்ந்து கேட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இன்றைய சந்திப்பின் போது, மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்றும், ஊடகங்களை ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பல ஜனாதிபதிகளை நேரில் சந்தித்திருந்தாலும் தற்போதைய ஜனாதிபதியை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புதுக்குடியிருப்புக்கு வந்தபோதும் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

“எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. எமது நிலத்தில் உள்ள வளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இது எவ்வகையிலும் நியாயமல்ல. எமது கேப்பாபிலவு மண்ணில் எங்களை வாழ விடுங்கள் என்பதே எமது கோரிக்கை” என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,