மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு விசாரணை நடைபெற்று வரும் இந்தவேளையில் பொதுமக்களின் உதவியை காவல் துறையினர் கோருகின்றனர்.

38 வயதுடைய மெஸ்கான் ஐனி (Mezhgan Aini) அல்லது “சாரா” (Sarah) என்ற பெயர்களாலும் அறியப்பட்டவர், மிசிசாகாவில் உள்ள குயின் ஃப்ரெடெரிகா டிரைவ் (Queen Frederica Drive) மற்றும் டண்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) பகுதிகளில் வசித்து வந்தார். அவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்ததாக அறியப்பட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் இருந்ததையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பீல் பிராந்திய காவல் துறைக்கு அவர் காணாமல் போனதாக புகார் அளித்தனர்.

தற்போது பீல் பிராந்திய காவல் துறை மெஸ்கான் ஐனி காணாமற்போன விவகாரத்தை கொலை வழக்காக விசாரித்து வருகிறது.

2022 ஜூன் மாதம் முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை அவரது இல்லம் அமைந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கவனித்தவர்கள், இதுவரை காவல் துறையுடன் பேசாதவர்கள், அல்லது மெஸ்கான் ஐனி அல்லது அவரது குடும்பத்தைப் பற்றிய தகவல் உடையவர்கள் விசாரணைகளுக்கு முன்வருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

தகவல் கொண்டவர்கள் கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவை 905-453-2121, ext. 3205 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அத்துடன், பெயர் வெளியிடாமல் தகவல் வழங்க விரும்புவோர் Peel Crime Stoppers-ஐ 1-800-222-TIPS (8477) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது peelcrimestoppers.ca இணையதளம் வழியாக தகவல் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ravikaran11

பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் – கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி

November 26, 2026

பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைக்கூடத் தடுக்கும் உங்களால் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்களென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

gajendra

ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்

November 26, 2026

விடுதலைப் புலிகள் அமைப்பும், ஜே.வி.பி.யும் ஆயுதமேந்திப் போராடியவர்கள் என்றாலும், இனவாதத்தின் அடிப்படையில் அவர்களை இந்த அரசாங்கம் உள்ளிட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள்

dsfs2

பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கைக்கு நாடு கடத்தப்படும் குற்றவாளிகளுக்கு புதிய பொறிமுறை

November 26, 2026

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பில் உள்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன்

piere polli

வெயின்ரைட் தளத்தில் தன்னுடன் புகைப்படம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தாதியொருவர் வேலையை இழக்க நேரிடலாம் என பொய்லியேவ் குற்றச்சாட்டு

November 26, 2026

வெயின்ரைட் தளத்தில் தன்னுடன் புகைப்படம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தாதியொருவர் வேலையை இழக்க நேரிடலாம் என பொய்லியேவ் குற்றச்சாட்டு ஒட்டாவா, நவம்பர்

on

மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் – இலங்கை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

November 26, 2026

ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

fdsf

இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

November 26, 2026

இலங்கை வர்த்தக நிறுவனங்கள் வெளிநாட்டு நாணய மாற்று விகித அபாயங்களைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் புதிய

பலாங்கொடை காஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கு பிணை

November 26, 2026

ருவான்வெலி மகாசாய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை காஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11

us

அமெரிக்கா அறிவித்துள்ள புதிய சுற்று வரி விதிப்பு நடவடிக்கைகளிலிருந்து இலங்கை விலக்கல்!

November 26, 2026

சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளை இலக்கு வைத்து

sam

சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் இறுதிச் சுற்றுக்கு சம்மாந்துறை மாணவி!

November 26, 2026

சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் – 2026 (International English Olympiad – IEO) போட்டியின் முதலாம் சுற்றில் சிறந்த பெறுபேற்றைப்

Diana

குற்றத்தை ஒப்புக்கொண்டார் முன்னாள் எம்.பி. டயானா கமகே

November 26, 2026

சரியான விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) டயானா கமகே இன்று (26) கொழும்பு

kows

ஊடகத்துறையை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது – ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன கருத்து!

November 26, 2026

ஊடகச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தும்போது, அடிப்படை ஊடக ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதும் அவசியமாகும்; ஊடகத்துறையை எவ்வாறு

d

இலங்கையின் பாதாள உலகக் குழுவுக்கு வு-56 துப்பாக்கி வழங்கியவர் துபாயில் கைது!

November 26, 2026

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு, பொலிஸ் வீதித்தடையில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது தனது கடமை நேர T-56 ரக துப்பாக்கியைத் திருடி,