ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இன்று(04.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடல் வழியாக கஞ்சாவை கடத்துவதாக கிடைக்கப்பெற்ற கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(03.03.2026) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடானது ஒரு ‘செயற்கையான’ சூழலாகும். இன்னும் ஓரிரு வாரங்களில் நிலைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும். எரிபொருள் விநியோகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய […]
வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றையதினம்(3.3.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டு உள்ள வெளிநாட்டுச் நாணயமாற்றுச் சட்டத்தின் கீழான கட்டளை ஆனது நாடு பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய மீட்சி, அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் ஆகிய வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் ஒரு […]
பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, மூன்றரை இலட்சமாகக் காணப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது இரண்டரை இலட்சமாகக் குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவிக்கையில், “ஆரோக்கியமான பெண் குழந்தையிலிருந்தே ஆரோக்கியமான தாய் உருவாகிறாள். ஏனெனில், 12-14 வயது முதல், பூப்படைந்த நாள் தொடக்கம் அந்தப் பிள்ளை […]
போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது
திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய், வான்எல, பன்சல்கொடல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 1,450 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் வனவிலங்குகளை […]
பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்து மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அதே பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சந்திரகுமார் இன்று (04.03.2026) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துக்க அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வீதிகளில் உள்ள […]
தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal Ceramics Lanka PLC (Rocell)இன் எஹெலியகொட கிளை உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. அதன்படி, அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 458,629 ரூபா மற்றும் Royal Ceramics Lanka […]
கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மொறவெவ பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம், மஹதிவுள்வெவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் […]
நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு தரப்பினடமிருந்து மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் நிவாரண கொடுப்பனவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த […]
மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (4) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தி மோசமான முறையில் சித்தரிப்பது பொருத்தமில்லை. அதனால் இதுதொடர்பில் மக்களிடம் மன்னிப்பு கோருவது மிகவும் பொருத்தமாகும். அதனால் சபையில் பிரதமர் இருக்கும் நிலையில் இதனை […]