லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கட்சி மிகவும் தீர்க்கமான மற்றும் சவாலான அரசியல் பயணத்தை மேற்கொண்டதாகவும் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது எனவும் தற்போது இடதுசாரி கொள்கைகளை கைவிடாத அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து மீண்டும் இலங்கையின் பிரதான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு […]

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு 20மூ முதல் 30மூ வரை பாதிப்பு ஏற்படும் என சுற்றுலா துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளில் சுமார் 40 சதவீதமானோர் டுபாய், கட்டார் அல்லது அபுதாபி ஆகிய விமான நிலையங்கள் ஊடாகவே வருகின்றனர். தற்போது நிலவும் யுத்த சூழல் காரணமாக […]

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. கைதர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேணிநகர் பகுதியில், பொதுத் தேவைக்காக காணி ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த காணியை தனிநபர் ஒருவர் அத்துமீறி தன்வசப்படுத்தியிருந்தார். இது குறித்துப் பிரதேச சபை உறுப்பினர், கிராம அபிவிருத்திச் சங்கம், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பிரதேச செயலாளரின் […]

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை மீட்கத் தொடங்கியது என்று மூன்று அமெரிக்க அதிகாரிகள் இன்று புதன்கிழமை ரொய்ட்டர்ஸ் சேவையிடம் தெரிவித்தனர் என செய்தி வெளியாகியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத  அதிகாரிகளில் ஒருவர் இந்தத் தாக்குதல் அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும் வெளிநாட்டு மாத்திரைகளை க்யூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை (04) அன்று அதிகாலை பறிமுதல் செய்துள்ளனர். 20,400 வலி நிவாரணி மாத்திரைகள், 4,800 வெளிநாட்டு வயாகரா மாத்திரைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியனவே கைப்பற்றப்பட்டன.கைப்பற்றப்பட்ட பொருட்களின் இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சமாகும். கடத்தலுக்குப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருந்த ஒரு படகு […]

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை, பட்டியகெதர எனசல்பெத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய லக்ஷ முதியன்சேலாகே வசந்த பிரியதர்ஷன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், தனது பிள்ளையுடனும் வயோதிப தாயுடனும் பட்டியகெதர ஏனசல்பெத்த வீட்டில் வசித்து வந்ததாகவும், இவரது மனைவி வெல்லவாய பகுதியில் வசித்து வருவதாகவும் […]

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த பெண்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத நிலையை உறுதிப்படுத்துவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை(4) அன்று சுகாதார அமைச்சரிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த 23 வயதுடைய யுவதியொருவரின் உடல் பிணவறையில் […]

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து வருகிறது. இந்த மாற்றம் அரசின் அனைத்து நிலைகள், அவசர சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து செயல்படும் ஒரு கூட்டுத் திட்டமாகும் என நயாகரா பிராந்திய காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. இது ஒன்டாரியோ மாகாண அரசு வழங்கும் நிதியுதவியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நயாகரா முழுவதும் உள்ள அவசர சேவைகள், இந்த […]

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு செய்யப்படும் என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலேயே ஒன்டாரியோ நெடுஞ்சாலைகளை கனிம வளங்கள் நிறைந்த Ring of Fire பகுதியுடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும், அந்தப் பகுதிக்கான சாலைகள் தற்போது 2031 நவம்பர் மாதத்திற்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் முதல்வர் டக் பேர்ட் தெரிவித்தார். புதிய கால அட்டவணையின்படி, […]

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்‌ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா, ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இஸ்‌ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்‌ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும், உலகத்தையும், பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. […]