சீன பெண்கள் சம்மேளனத்தினால் சுகாதாரப் பொருட்கள் வழங்கல்

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்களை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முன்முயற்சியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அனைத்து சீன பெண்கள் சம்மேளனம் (All-China Women’s Federation – ACWF) 1,000,000 யுவான் (சுமார் 43 மில்லியன் ரூபாய்) பெறுமதியான பொருட்கள் தொகுதியை நன்கொடையாக வழங்கியிருந்தது. இலங்கை பாராளுமன்ற பணியாளர்களுக்கு தாய் சேய் அறை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஊடாக நாடுபூராகவும் விநியோகிக்கப்படவுள்ள பெண்களுக்கான சுகாதார உற்பத்திகள் இதில் உள்ளடங்கியிருந்தன.

அதற்கமைய, இந்த நன்கொடையின் ஒரு பகுதியாக உள்ள சுகாதார நப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் (Baby Diapers), குழந்தைகளுக்கான துடைப்பான்கள் (Baby Wipes), டிஷ்யூ பேப்பர், மென்மையான பருத்தித் துவாய்கள் (Soft Cotton Towels), கிருமிநீக்கும் கைச்சுத்திகரிப்புத் திரவம் உட்பட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்கள் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்ரி போல்ராஜின் தலையீட்டில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்களை விநியோகிக்கவுள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர், பெண்களை வலுவூட்டுவது மற்றும் சிறுவர்களின் நலனுக்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பெறப்பட்ட இந்த நன்கொடையை, தற்போதைய பேரனர்த்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கத் தீர்மானித்திருப்பது அவர்களுக்கு ஒரு நிவாரணமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அத்துடன், இந்த நன்கொடையை வழங்குவதற்கு முதன்மைக் காரணமாக இருந்த சீன மக்கள் குடியரசுக்கும், சீனத் தூதுவர் சீ ஷென்ஹொங் (Qi Zhenhong) அவர்களுக்கும் மற்றும் அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்துக்கும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர அவர்கள் விசேட நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்ரி போல்ராஜிக்கும், இது தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பாரியளவில் ஆதரவை வழங்கிய பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்

pa

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 16 பேர் பலி

September 20, 2026

பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே உள்ள கோஹாட் காவல்படை வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட

WhatsApp Image 2026-09-20 at 15.25.28

நற்பிட்டிமுனையில் அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்

mo

வாகன முறைப்பாடுகளுக்கு புதிய அவசர உதவி இலக்கம்

September 20, 2026

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ் அப் அவசர உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 074 245 3300 என்ற இந்த

WhatsApp Image 2026-09-20 at 8.44.04 PM

எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத்

WhatsApp Image 2026-09-20 at 8.39.41 PM

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை… வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

September 20, 2026

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை.

WhatsApp Image 2026-09-20 at 8.35.22 PM

காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு

September 20, 2026

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி

WhatsApp Image 2026-09-20 at 8.15.59 PM

“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

September 20, 2026

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து

WhatsApp Image 2026-09-20 at 7.54.45 PM

அதிதீவிர மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை !

September 20, 2026

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்

WhatsApp Image 2026-09-20 at 7.50.47 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அறிவிப்பு !

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும்

WhatsApp Image 2026-09-20 at 7.46.21 PM

அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் !

September 20, 2026

இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாத்தறை, அக்குரஸ்ஸவில்

WhatsApp Image 2026-09-20 at 7.38.24 PM

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

September 20, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை