இத்தாலியில் மீண்டும் போராட்டங்கள்: பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர்!

இத்தாலியின் பல்வேறு நகரங்களில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளுக்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிலான், ரோம், டுரின், நேபிள்ஸ், போலோன்யா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணிகளில் பங்கேற்றனர். சமூக மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சில போராட்டக்காரர்கள் போத்தல்கள், கற்கள் மற்றும் பட்டாசுகளை வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிலானில் நடைபெற்ற பேரணி அமைதியான முறையில் இடம்பெற்ற நிலையில், அங்கு பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் பணியில் […]

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை இயக்கி ஈழத்தமிழர் சாதனை!

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் இருந்து கொழும்புக்கான தனது நேரடி விமானச் சேவையை British Airways நிறுவனம் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கியுள்ளது. ​கடந்த அக்டோபர் 24 அன்று கொழும்பு வந்தடைந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விழாக்கால விமானத்தில் இலங்கை பின்னணியைக் கொண்ட 3 திறமையான பணியாளர்கள் ஒன்றாகக் கடமையாற்றியுள்ளனர். இரு இணை விமானிகள் இந்த பிரம்மாண்ட விமானத்தை இயக்கிய இரு ஃபர்ஸ்ட் ஆபிஸர்களும் இலங்கைத் தொடர்பைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது! இதில் ஒருவரான ஃபர்ஸ்ட் […]

அச்சுறுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி- கஜேந்திரன்

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையானது தமிழ் மக்களின் அடிப்படை உரிமையாகும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்தும் அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் சிலை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது பொலிஸ்விசாரணைகள் மூலம் எங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி […]

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு – காயங்களை பார்த்தோம் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவிப்பு

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் ஹோமாகம பொலிஸ்; நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஹர்ச குமாரா என்ற 29 வயது நபரே உயிரிழந்துள்ளார். இவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனா. நாங்கள் அவரை பார்க்கசென்றவேளை அவர் தாக்கப்பட்டதை அறிந்தோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர் நடக்க முடியாதநிலையில் இருந்தார் எனவும் குடும்பத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் கூண்டிலிருந்து அவர் வந்தவேளை காயங்கள் வெளிப்படையாக தென்பட்டன குருதி வெளியேறிக்கொண்டிருந்தது […]

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் – உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 பேர் கொழும்பில் சிகிச்சைக்கு பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டிருந்த ஈரானிய கப்பல் பணியாளர்கள் 40 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு இலங்கை மருத்துவசிகிச்சையை வழங்கிய பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைத்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட 40 பேருக்கு மருத்துவசிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை தங்கள் நாட்டிற்கு இலங்கை அனுப்பிவைத்துள்ளதை வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் உறுதி செய்துள்ளார். கப்பல்களில் நோய்வாய்ப்பட்ட 40 பேரை மீட்டு அவர்களுக்கு மருத்துவசிகிச்சையை வழங்கிய பின்னர் சனிக்கிழமையே ஈரானிற்கு அனுப்பிவைத்தோம் என அவர் தெரிவித்துள்ளார். காலி கடற்பரப்பிலிருந்து 24 கடல்மைல் […]

சிறைவாசம் அனுபவிக்கும் மததலைவர்கள் மத ஆடைகளை அணிய அனுபவிக்கும் புதிய விதிகள் – வர்த்தமானியில் வெளியிட்டது அரசாங்கம்

சிறைத்தண்டனை அல்லது விடுதலையின் போது பௌத்மதகுருமாரின் துறவற ஆடைகளை களைத்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்து சிறைச்சாலைதிணைக்களத்தின் நிலையியற் கட்டளைகளில் திருத்தங்களை செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. நீதியமைச்சரின் ஒப்புதலுடன் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர்நாயகம் ஆர் பிரசாந் ஹேமந்த குமார இந்த அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். புதிய திருத்தங்களின் படி குற்றவாளியாக அல்லது கைதியாக சிறையில் அடைக்கப்படும் எந்தவொரு பௌத்தமதகுருவினதும் காவியுடையை களைவதற்கு முன்னர் சிறைச்சாலைகள் திணைக்களம் பௌத்தவிவகாரங்கள் தொடர்பான திணைக்களத்துடன் கலந்தாலோசிக்கவேண்டும். பௌத்தவிவகாரங்களுக்கான திணைக்களம் அதன் […]

பொருளாதார ஸ்திரதன்மையை பாதுகாக்கும் அதேவேளை டொலர் மீதான அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம் -ஜனாதிபதி

இலங்கை அதன் எல்லைக்கு வெளியேயிருந்து வரும் அதிர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாடு எதிர்பாராத சர்வதேச நிகழ்வுகளால் சோதிக்கப்படுகின்றது,குறிப்பாக மத்திய கிழக்கில் காணப்படும் சூழ்நிலையால்,மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் சூழல் எரிசக்தி செலவுகள் மற்றும் அந்நிய செலாவணி தேவைகள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டது,இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திற்குள்ளேயே அந்த 4 பில்லியன் […]

மீண்டும் அரசியலில் ஈடுபடும்போது எவரையும் பழிவாங்கவேண்டாம் – நீதித்துறையை முழுமையாக நம்புங்கள் – விளக்கமறியலில் உள்ள நாமலிற்கு மகிந்த கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தற்போது விளக்கமறியலில் உள்ள மகன் நாமல் ராஜபக்சவிற்கு உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது 2010 இல் நாமல்ராஜபக்ச முதன்முதலில் அரசியலில் நுழைந்தபோது தான் வழங்கிய அறிவுரைகளை மகிந்த ராஜபக்ச நினைவுகூர்ந்துள்ளார். நாமல்ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவதற்கு தன்னிடம் அனுமதியை கோரினார் அப்போது சிறைவாசம் துன்பங்களை எதிர்கொள்ள தயாராகயிருக்கவேண்டும் என கூறினேன். நீங்கள் அரசியலுக்கு வரவிரும்பினால் வாருங்கள் ஆனால் சிறைவாசத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்ள தயாராகயிருக்கவேண்டும்  என தெரிவித்தேன் நான் அரசியல் நுழைந்தவேளை ஆதாரமற்ற […]

ராஜ்சோமதேவவின் அறிக்கை சட்டவிரோத படுகொலைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பலாம் – பிரித்தானிய தமிழர் பேரவை

செம்மணி மனித புதைகுழி குறித்த பேராசிரியர் ராஜ்சோமதேவ வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை இந்த அறிக்கை உண்மையை கண்டறியும் முயற்சிகளை சீர்குலைக்கலாம் என தெரிவித்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது செம்மணி மனித புதைகுழிக்குள் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோயால் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் இறந்தவர்களுடையதாகயிருக்கலாம் என பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளமை குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றது. கல்விபதிவுகள் மற்றும் மற்றும் […]

அர்னாப் புயல்… மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து வருவதால், பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த புயல் இன்று (26) காலை 5.30 மணியளவில் வட அட்சரேகை 15.4° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 88.9° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு அருகில் நிலைகொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை தீவிர புயலாகவும், நாளை (27) மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட […]