பாடசாலைகளை மூடுவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் நிலவும் கனமழை காரணமாகப் பாடசாலைகளில் வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காதல் செய்வோருக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் ஒன்லைன் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ளும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மைய காலத்தில் ஒன்லைன் ஊடாக நட்பு, காதல் அல்லது டேட்டிங் செயலிகள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி பண மோசடிகளில் ஈடுபடும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ கவர்ச்சிகரமான முறையில் குறுந்தகவல்களை அனுப்பி நபர்களை ஏமாற்றி வருவதாகவும் […]

பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்!

தைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இஷார ஹர்ஷ குமார என்பவர் ஆவார். பொலிஸாரின் கடும் தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். நேற்றுக் காலை சந்தேகநபரைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது, பொலிஸார் அவரைத் தாக்கியுள்ளமை […]

வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட அகலாங்கு 15.3° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 89.7° பகுதியில் மையம் கொண்டுள்ளது. இந்த தொகுதி மேலும் […]

‘விதையனைத்தும் விருட்சமே’; கீரிமலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு

வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் ‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பு இணைந்து முன்னெடுத்த பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் நேற்று காலை கீரிமலை பகுதியில் நடைபெற்றது. இதன்போது, கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய முன்றலில் இருந்து கீரிமலை ஆலயத்தைச் சுற்றியுள்ள புனிதப் பிரதேசப் பகுதிகளில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் என்பன முற்றாக அகற்றப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் “விதையனைத்தும் விருட்சமே” அமைப்பின் உறுப்பினர்கள், வலி. வடக்கு பிரதேசசபை தவிசாளர் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், இளவாலை […]

சினோபெக் நிறுவனமும் ஒக்டென் 95 விலையை உயர்த்தியது

சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது. இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாவாக உயர்ந்துள்ளது. லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை உயர்த்தியிருந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் இந்த விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.