இலங்கையில் ஒன்லைன் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ளும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைய காலத்தில் ஒன்லைன் ஊடாக நட்பு, காதல் அல்லது டேட்டிங் செயலிகள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி பண மோசடிகளில் ஈடுபடும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ கவர்ச்சிகரமான முறையில் குறுந்தகவல்களை அனுப்பி நபர்களை ஏமாற்றி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒன்லைன் ஊடாக பாலியல் சேவைகளை வழங்குவதாகவும், நட்புறவை பேண முடியும் என்றும் கூறி சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புகொண்டு, விசேட செயலியை பதிவிறக்கம் செய்ய தூண்டுவதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.