யாழ்ப்பாணம், மானிப்பாய் சென். பீட்டர்ஸ் வீதிக்கு அருகிலுள்ள பகுதியில், 500 போதை குளிசைகளுடன் 24 மற்றும் 26 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.