விசாரணை அதிகாரிகள் சந்தேக நபர்களின் விருப்பப்படி நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேக நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது. விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு தெரியாவிட்டாலும், நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அப்படையில் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் மற்றும் சுரேஷ் சலேயின் விவகாரம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் […]
மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் வெற்றி பெறுவோம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, போலியான வாக்குறுதிகள் மற்றும் கடந்த அரசாங்கங்கள் மீதான பெறுப்பு ஆகியவற்றை […]
16 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்யக் கோரி சரண குணவர்தன மேன்முறையீட்டு மனு தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இரத்து செய்து, தன்னை விடுதலை செய்யுமாறு கோரி நான்கு மேன்முறையீட்டு மனுக்களை முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, கட்டாய கொள்முதல் நடைமுறைகளைப் […]
நிலக்கரி கொள்வனவு ஊழல்: முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு நீண்ட விசாரணை!

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் எரிசக்தி அமைச்சரும் பொறியியலாளருமான குமார ஜயகொடியிடம் நேற்று (30) சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தி வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வ அழைப்பாணையின் பேரில் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரான அவரிடம், நிலக்கரி இறக்குமதி பரிவர்த்தனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொள்வனவு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுயாதீன விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் கடந்த […]
“செம்மணி எழுச்சி” கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்!

இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்ட நிகழ்வான “செம்மணி எழுச்சி” எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. Behind me media மற்றும் Behind me foundation ஆகிய நிறுவனங்களின் ஒழுங்கமைப்பில் மாலை 5:00 மணி தொடக்கம் Albert Campbell Square, Scarborough என்ற முகவரியில் “செம்மணி எழுச்சி” நிகழ்வு நடைபெறவுள்ளது. வெறும் உடல்கள் மாத்திரமன்றி ஆயிரம் குடும்பங்களின் சிரிப்புகளும்… ஆயிரம் கனவுகளும்… ஆயிரம் சொல்லப்படாத கதைகளும்… மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை நாம் […]
அதிகரித்து வரும் மோசடி – வணிக உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு எட்மண்டன் காவல்துறை எச்சரிக்கை

எட்மண்டன் காவல் துறையின் (EPS) நிதிக் குற்றப் பிரிவு, சமீபத்திய மாதங்களில் நகரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பொதுவான மோசடி முறைகள் குறித்து வணிக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் வணிக நிறுவனம் ஒன்று $50,000 மதிப்பிலான தயாரிப்புகளை இழந்ததைத் தொடர்ந்து, 2026 மார்ச் மாதத்தில் புலனாய்வாளர்கள் இந்த ஆள்மாறாட்ட மோசடி (impersonation fraud) குறித்து விசாரிக்கத் தொடங்கினர். மோசடி செய்பவர்கள் பிற நிறுவனங்களின் உண்மையான ஊழியர்களைப் போல நடித்து, நெஸ்லே (Nestle), பார்சன்ஸ் கார்ப்பரேஷன் (Parsons […]
ஃபால் ரிவர் இல்லத்தில் இரு உடல்கள் மீட்பு; சந்தேகத்திற்கிடமான மரணங்கள் என நோவா ஸ்கோடியா ஆர்.சி.எம்.பி தெரிவிப்பு

ஹாலிஃபாக்ஸ் (Halifax) புறநகர்ப் பகுதியில் உள்ள இல்லம் ஒன்றில் திங்கட்கிழமை இருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நோவா ஸ்கோடியா (N.S.), ஃபால் ரிவர் (Fall River) பகுதியில் நிகழ்ந்த இந்த இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. திங்கட்கிழமை பிற்பகல் 3:40 மணியளவில், லிங்கன்ஷயர் டிரைவில் (Lincolnshire Drive) உள்ள ஒரு வீட்டிற்குள் ஆடவர் ஒருவர் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, ஆர்.சி.எம்.பி ஹாலிஃபாக்ஸ் பிராந்தியப் பிரிவு (RCMP Halifax Regional Detachment) […]
தமிழ்த் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை: மைத்திரியின் மகனுக்கும் தொடர்பு?

தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலையில் மேலும் பல பரபரப்பான தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.கைது செய்யப்பட்டுள்ள விஜேயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் சம்பந்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தினேஷ் ஷாப்டரின் வர்த்தக நடவடிக்கையானது திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்குவதாகும்.அதாவது பிரஜெக்டுகளை (வர்த்தக நடவடிக்கைகள்) ஒரு பிணையாக வைத்துக் கொண்டு நிதியுதவி செய்வதாகும். ரகித ராஜபக்ச மற்றும் மைத்திரிபாலவின் மகன் தஹம் சிறிசேன ஆகியோர் ஒரு பிரஜெக்ட் பற்றிய […]
பிராம்ப்டனில் (Brampton) இருந்து பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள நபர் ஒருவரைக் காணவில்லை
பீல் பிராந்தியம் (Region of Peel) – பிராம்ப்டனைச் சேர்ந்த, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள (vulnerable) நபர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு, பீல் பிராந்திய காவல்துறையின் 21 ஆம் பிரிவு குற்றவியல் புலனாய்வுப் பணியக (CIB) அதிகாரிகள் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். மஹத் (Mahad) என்ற இந்த நபர், கடைசியாக ஜூன் 29 அன்று மாலை சுமார் 7 மணியளவில், டொராண்டோவில் உள்ள ஹம்பர் காலேஜ் பொலிவார்ட் (Humber College Boulevard) மற்றும் ஹைவே 27 (Highway 27) […]
தேசிய பேரிடர் முகாமைத்துவ சபையுடன் ‘எல் நினோ’ குறித்த ஜனாதிபதி கலந்துரையாடல்

எல் நினோ காலநிலை நிலைமையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவனம் செலுத்தி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை, ஜனாதிபதியின் தலைமையில் நேற்று(30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, எல் நினோ நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பேரிடர் முகாமைத்துவ அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய பேரிடர் ஒருங்கிணைந்த […]