விசாரணை அதிகாரிகள் சந்தேக நபர்களின் விருப்பப்படி நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேக நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது. விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு தெரியாவிட்டாலும், நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அப்படையில் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் மற்றும் சுரேஷ் சலேயின் விவகாரம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அப்படையில் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் சுரேஷ் சலேயின் விவகாரம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தொடர்ச்சியாகவும் மிகவும் வேகமாகவும் நடைபெற்று வருகின்றன.

இந்த விசாரணைகளின் உள்ளகத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தெரியவராமல் இருக்கலாம். ஆனால், விசாரணைகளின் முன்னேற்றங்கள் அனைத்தும் நீதிமன்றத்திற்கு முறையாக அறிக்கை செய்யப்படுகின்றன. அப்போது பொதுமக்களுக்கு உண்மை நிலைமையைத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் கண்டறிக
Geographic Reference
விசேட செய்திகள்
விளையாட்டு செய்திகள்

இவ்விசாரணைகள் சரியாக நடக்கிறதா இல்லையா என்பதைப் பார்ப்பதற்கான சிறந்த அளவுகோள் என்னவென்றால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் நடத்தையும் அவர்களின் பதற்றமும்தான். அவர்கள் எந்தளவுக்கு பதற்றமடைகிறார்களோ, அந்தளவுக்கு விசாரணைகள் சரியான பாதையில் நகர்கின்றன என்று அர்த்தம்.

மேலும், இப்போது ஒரு புதிய கலாசாரம் நாட்டில் உருவாகியுள்ளது. சந்தேக நபர்களே தங்களுக்கு இந்த விசாரணை அதிகாரிதான் வேண்டும் என்றும், குறிப்பிட்ட அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார்கள். அவ்வாறான கோரிக்கைகளுக்கு ஒருபோதும் இடம் வழங்கப்பட மாட்டாது.

பொலிஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு போன்றவற்றில் தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது பணிகளைச் சுயாதீனமாகச் செய்கிறார்கள். சந்தேக நபர்களின் விருப்பப்படி புலனாய்வு அதிகாரிகளை நியமிக்க முடியாது.

சுரேஷ் சலேவின் ஆரோக்கியப் பிரச்சினைகள் குறித்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அவதானம் செலுத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் பரிசோதித்து அடையாளம் காணப்பட வேண்டிய நோய்கள் ஏதேனும் இருந்திருந்தால், அவற்றையும் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

176 bus

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு: குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 34

July 1, 2026

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC), இலங்கை

suresh11

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது – நீதிமன்றம்

July 1, 2026

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Nalinda Jayatissa Cabinet Meet-790605

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று

election11

தேர்தல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல் காலம் அறிவிப்பு; விரைவில் தேர்தல் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

July 1, 2026

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசத்தின் அடிப்படையிலேயே மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான காலத்தை அறிவிக்க முடியும்.

court-judge-hammer-gavel-696x398

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ்

Suresh Salley Arrested-828580

கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் சுரேஷ்

முன்னாள் ஜனாதிபதியின் மகனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர வாகன மோசடி குறித்து சிஐடி தீவிர விசாரணை

July 1, 2026

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர வாகனக் கடத்தல் மோசடி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)

2

எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதவியை ஏற்க முடியாது: எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

July 1, 2026

கோவை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வழங்கிய துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முடியாது என்று முன்னாள்

1

கமிஷன்.. கட்டிங்.. கரப்ஷன்… கடந்த திமுக ஆட்சி மீது வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

July 1, 2026

செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முந்தைய

deat

பாலாவி வன்னித்தீவில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

July 1, 2026

புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் ஆள் நடமாட்டமற்ற, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய

jud_1

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்ற: 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

July 1, 2026

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு

meddd

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் இடமாற்றம்

July 1, 2026

மேல் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் (MLT) 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள்