சிந்து நதி நீர் ஒப்பந்தம்: வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை நடாத்தியது பாகிஸ்தான்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்துஇ வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை பாகிஸ்தான் நேற்று இஸ்லாமாபாத்தில் நடத்தியது. தண்ணீர் ராஜதந்திரம்இ சர்வதேச சட்டம் மற்றும் பிராந்திய அமைதி குறித்து விவாதிக்க உலகளாவிய சட்ட வல்லுநர்கள்இ எல்லைகடந்த நீர்நிலை நிபுணர்கள் மற்றும் மூத்த அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் இந்த மாநாட்டில் ஒன்றாகக் கூடினர். “சிந்து நதி நீர் ஒப்பந்தம்: தெற்காசிய அமைதிக்கான ஒரு முக்கிய கருவி” என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் பாகிஸ்தான் […]
நாட்டின் தேசியப் பிரச்சினையாக விவசாயிகளின் சிக்கல்கள் மாறியுள்ளன!

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார். பொலன்னறுவையில் விவசாயத் தலைவர்களுடன் இன்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை அரசாங்கம் தனது பிரதான கடமையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, இன்று முற்பகல் மெதவாச்சிய பிரதேசத்திற்குச் சென்று, பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் […]
கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (01) புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்தத் தீர்மானத்தை அறிவித்தார். தற்போது நடைமுறையிலுள்ள பஸ் கட்டணக் கொள்கையின் கீழ், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்தை அறிவிக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, 2026 பெப்ரவரி […]
நாளை தவெகவில் இணைகிறேன்: சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை (ஜூலை 2) தவெக-வில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான நிகழ்வில், முதல்வர் விஜய் முன்னிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் இணையவுள்ளார். ஏற்கனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிற எம்.எல்.ஏ.க்கள் விலகிய நிலையில், சி.விஜயபாஸ்கரின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க.விற்கு மற்றொரு பலத்த அடியாகும். “என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக தவெக-வில் இணைகிறேன்” என்று […]
பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு: குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 34

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC), இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் (LPBOA) உடன்பாடு எட்டியுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்தின் குறைந்தபட்சக் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். மேலும், 100 கிலோமீற்றர் வரையான பயணங்களுக்கான பேருந்துக் கட்டணங்களை 12 சதவீதத்தால் (12%) அதிகரிப்பதற்கு உடன்பாடு […]
சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது – நீதிமன்றம்

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (01) புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாள்ர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். தித்வா அனர்தத்ததின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஏனைய உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதற்கமைய அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும் இம்மாதத்திலிருந்து அவசரகால சட்டத்தை நீடிக்காதிருப்பதற்கு […]
தேர்தல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல் காலம் அறிவிப்பு; விரைவில் தேர்தல் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசத்தின் அடிப்படையிலேயே மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான காலத்தை அறிவிக்க முடியும். விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்தார். வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல்போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (30) முறைப்பாடு அளிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டுக்கு அமைய சிசிரிவி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸார், குறித்த […]
கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் சுரேஷ் சலேவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.