மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் வெற்றி பெறுவோம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை  சிதைவடைந்துள்ளது.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன்  அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

போலியான வாக்குறுதிகள் மற்றும் கடந்த அரசாங்கங்கள் மீதான  பெறுப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலில் வெற்றிப் பெற்றார். ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இன்றுவரை அரசியல் பழிவாங்களுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. மாறாக மக்களின் மீதே அதிக வரி சுமை திணிக்கப்பட்டுள்ளது. திறைசேரி நிரம்பி வழிகிறது என்று குறிப்பிட்டுக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்விப்பதால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. ஆகவே மக்களுக்கு நிவாரணமளிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

தற்போதைய தருணத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறுமாயின் மக்கள் அரசாங்கத்துக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை  சிதைவடைந்துள்ளது.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன்  அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்.மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற செயற்குழு உரிய காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்காது. காலத்தை மாத்திரம் இழுத்தடிப்புச் செய்யும் என்றார்.

suresh11

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது – நீதிமன்றம்

July 1, 2026

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Nalinda Jayatissa Cabinet Meet-790605

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று

election11

தேர்தல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல் காலம் அறிவிப்பு; விரைவில் தேர்தல் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

July 1, 2026

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசத்தின் அடிப்படையிலேயே மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான காலத்தை அறிவிக்க முடியும்.

court-judge-hammer-gavel-696x398

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ்

Suresh Salley Arrested-828580

கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் சுரேஷ்

முன்னாள் ஜனாதிபதியின் மகனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர வாகன மோசடி குறித்து சிஐடி தீவிர விசாரணை

July 1, 2026

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர வாகனக் கடத்தல் மோசடி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)

2

எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதவியை ஏற்க முடியாது: எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

July 1, 2026

கோவை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வழங்கிய துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முடியாது என்று முன்னாள்

1

கமிஷன்.. கட்டிங்.. கரப்ஷன்… கடந்த திமுக ஆட்சி மீது வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

July 1, 2026

செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முந்தைய

deat

பாலாவி வன்னித்தீவில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

July 1, 2026

புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் ஆள் நடமாட்டமற்ற, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய

jud_1

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்ற: 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

July 1, 2026

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு

meddd

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் இடமாற்றம்

July 1, 2026

மேல் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் (MLT) 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள்

Ilaiay

இசைஞானி இளையராஜாவுக்கு 134 பாடல்களுக்கு தடை

July 1, 2026

இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட