தேசிய பேரிடர் முகாமைத்துவ சபையுடன் ‘எல் நினோ’ குறித்த ஜனாதிபதி கலந்துரையாடல்

எல் நினோ காலநிலை நிலைமையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவனம் செலுத்தி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.

தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை, ஜனாதிபதியின் தலைமையில் நேற்று(30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, எல் நினோ நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பேரிடர் முகாமைத்துவ அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய பேரிடர் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளின் ஆயத்த நிலைமைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

​பெரும்போக விவசாய நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிப்பது, நீர் வள முகாமைத்துவ மற்றும் வனவிலங்கு வலயங்களில் ஏற்படும் நீர் தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

வனவிலங்கு வலயங்களுக்குள் உள்ள குளங்களை விரைவாகப் புனரமைக்குமாறு ஜனாதிபதி சுற்றுச்சூழல் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், நீர்மின் உற்பத்தியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமிப்பதற்குத் தேவையான மின்கலங்களை இறக்குமதி செய்வதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பல நிறுவனங்களின் கீழ் சிதறிக்காணப்படும் பேரிடர் முகாமைத்துவப் பணிகளை ஒரே மத்திய நிலையத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள “தேசிய பேரிடர் முகாமைத்துவ ஒருங்கிணைந்த பொறிமுறை” குறித்த குழு அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவச் சட்டத்தில் உள்ள, பாதிப்பு ஏற்பட்ட பின்னர் செயல்படும் தற்போதைய முறைமைக்கு பதிலாக, பேரிடர்களை முன்கூட்டியே தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் புதிய சட்டக் கட்டமைப்பின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய பேரிடர் நிவாரணச் சேவை மையம் (NDRSC) ஆகியவற்றை ஒன்றிணைத்து, சேவைகளை மிகவும் திறம்பட மாற்றுவதற்கான முன்மொழிவு ஒன்றும் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.

மண்ணச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களை மீளக் குடியேற்றுவதற்காக, நான்கு வருட காலப்பகுதிக்குள் செயல்படுத்தக்கூடிய திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு முப்படைகளுக்கும் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளை மேம்படுத்துதல், பிரதேச மட்டத்தில் பேரிடர் உபகரணங்களின் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட பேரிடர் செயல்பாட்டு மையங்களை நிறுவுதல் குறித்தும் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

PVHUQOTZQFGQ3ARP7TQN4ZLLBM

கனடா தினத்தில் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையான செய்தியைப் பகிர்ந்து கொண்ட ஆல்பர்ட்டா முதல்வர்

July 1, 2026

ஆல்பர்ட்டா (Alberta) மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith), தனது கனடா தினச் செய்தியில், பொதுவான விழுமியங்களைச் சிந்தித்துப்

2LNSZ2MUP7S2PXR64RC7U5LL5A

பிரிவினைவாத இயக்கங்கள் உருவெடுத்துள்ள நிலையில் நாடு முழுவதும் கனடா தினக் கொண்டாட்டங்கள்

July 1, 2026

ஒட்டாவா (OTTAWA): மாறிவரும் உலகச் சூழல் மற்றும் உருவெடுத்து வரும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு மத்தியிலும், கனடியர்கள் புதன்கிழமை அன்று நாடு

Nalinda Jayatissa Cabinet Meet-790605

யாழ்ப்பாண மாநகர சபை கட்டடத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்கு ரூ. 1.96 பில்லியனை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

யாழ்ப்பாண மாநகர சபைக் கட்டடத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்காக, ஏர்-கண்டிஷனிங் (குளிர்சாதன) கட்டமைப்பு வசதிகளை நிறுவுவது

8

விஜய் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி சதியாம்.. தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி பேரமாம்! போலீசார் தகவல்

July 1, 2026

சென்னை: தவெக எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி, விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கத் திட்டமிட்டதாக தி.மு.க. முன்னாள்

carney july1

நாம் உண்மையான கனேடியர்களாக இருக்கும்போது கனடா வளர்கிறது: இதுவே நமது நம்பிக்கை – பிரதமர் கார்னி

July 1, 2026

தனது வருடாந்த கனடா தினச் செய்தியில், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஒற்றுமை, தயாள குணம் மற்றும் வலிமை

7

தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு- கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

July 1, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில், தவெக-வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, ம.தி.மு.க, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

6

“மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” பிலிகுண்டுலுவில் தொடங்கியது அன்புமணியின் நடைபயணம்

July 1, 2026

தருமபுரி: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிலிகுண்டுலுவில்

5

கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: அனுமதி நீட்டிப்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

July 1, 2026

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் இந்திய அருமணல் நிறுவனம் (IREL) மேற்கொண்டு வரும் கதிரியக்கக் கனிம அகழ்வுத் திட்டத்திற்கு,

4

“திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம்” – அமைச்சர் நிர்மல்குமார்

July 1, 2026

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற

Pa

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை நடாத்தியது பாகிஸ்தான்

July 1, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்துஇ வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை பாகிஸ்தான் நேற்று இஸ்லாமாபாத்தில்

Thil

நாட்டின் தேசியப் பிரச்சினையாக விவசாயிகளின் சிக்கல்கள் மாறியுள்ளன!

July 1, 2026

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர

Cabinet de

கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.