சுரேஷ் சலே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS – State Intelligence Service) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு வந்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்த உண்ணாநிலை போராட்டத்தின் போது சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் கொழும்பு […]
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு, ஜூலை மாதம் 08 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது. அதுவரை […]
சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐநா உபகுழு தனது இரண்டாவது இலங்கை விஜயத்தை நிறைவு செய்தது! 1 ஜூலை 2026

சித்திரவதைகள் மற்றும் ஏனைய cruel (கொடுமையான) நடத்தைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை, ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான உபகுழு (SPT – Subcommittee on Prevention of Torture) கடந்த 2026 ஜூன் 24 அன்று நிறைவு செய்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஐநா உபகுழு, கடந்த ஜூன் 15 முதல் 24ஆம் திகதி வரை […]
வெனிசுவேலா பூமியதிர்ச்சி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆகியது!

வெனிசுவேலாவின் வடக்குப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ரிச்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த பூமியதிர்ச்சி ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் சர்வதேச உதவிகள் குறித்த புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன. பூமியதிர்ச்சியால் இதுவரை 10,571 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 28,380 பேர் தற்சமயம் வைத்தியசாலைகளிலும், தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என […]
சிறைத்தண்டனையை இரத்து செய்யக் கோரி சரண குணவர்தன மனு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இரத்து செய்து, தன்னை விடுதலை செய்யுமாறு கோரி நான்கு மேன்முறையீட்டு மனுக்களை முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, கட்டாய கொள்முதல் நடைமுறைகளைப் […]
பாகிஸ்தானில் தனியார் கல்வி நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா புறநகர்ப் பகுதியில் இயங்கி வந்த தனியார் கல்வி நிலையம் ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 14 சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரத்திற்குள் முழு மீட்புப் பணிகளையும் நிறைவு செய்தனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். இந்த விபத்தில் மேலும் 5 சிறுவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என […]
விசாரணை அதிகாரிகள் சந்தேக நபர்களின் விருப்பப்படி நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேக நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது. விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு தெரியாவிட்டாலும், நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அப்படையில் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் மற்றும் சுரேஷ் சலேயின் விவகாரம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் […]
மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் வெற்றி பெறுவோம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, போலியான வாக்குறுதிகள் மற்றும் கடந்த அரசாங்கங்கள் மீதான பெறுப்பு ஆகியவற்றை […]
16 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்யக் கோரி சரண குணவர்தன மேன்முறையீட்டு மனு தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இரத்து செய்து, தன்னை விடுதலை செய்யுமாறு கோரி நான்கு மேன்முறையீட்டு மனுக்களை முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, கட்டாய கொள்முதல் நடைமுறைகளைப் […]
நிலக்கரி கொள்வனவு ஊழல்: முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு நீண்ட விசாரணை!

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் எரிசக்தி அமைச்சரும் பொறியியலாளருமான குமார ஜயகொடியிடம் நேற்று (30) சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தி வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வ அழைப்பாணையின் பேரில் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரான அவரிடம், நிலக்கரி இறக்குமதி பரிவர்த்தனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொள்வனவு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுயாதீன விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் கடந்த […]