இதுவரை கண்டறியப்படாத இன்னும் இரு மனிதப்புதைகுழிகள் ; மேலும் பல திடுக்கிடும் உண்மைகளைவெளிப்படுத்துகிறார் சோமரத்ன ராஜபக்ஷ

செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகாமையில் இருந்த கோவிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடும் என திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ள மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி […]
“எனக்கு ஏதேனும் நேர்ந்தால் ஜனாதிபதி, ரவி, ஷானி மற்றும் சில அதிகாரிகளுமே பொறுப்பு…” – சுரேஷ் சலேவின் கடிதம் குறித்து மனைவி தகவல்

சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் கவலை தெரிவித்துள்ள சுரேஷ் சலேவின் மனைவி, “கடந்த புதன்கிழமை சட்டத்தரணி அவரைச் சந்தித்த போது, சுரேஷ் சலே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார். அதில், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஜனாதிபதி, ரவி, ஷானி மற்றும் மேலும் சில அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயத்தை அதிகாரிகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (27) […]
எமது கட்சி மீது எதிர்க்கட்சி அவதூறு ; சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜே.வி.பி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் எமது கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பொய் கூறி எமது கட்சி மீது அவதூறு பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா அமைப்பாளர் வருண ராஜபக்ஷ அண்மையில் […]
விஜேதாசவின் மகன் விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோரின் கைது விவகாரத்தில் அரசாங்கம் எவ்வித அரசியல் தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. சட்டமும் பாதுகாப்புதுறையும் தங்களது கடமைகளை சுதந்திரமாக செய்து வருகின்றன. எதிர்க்கட்சியினர் எவரேனும் இதில் தொடர்புபட்டிருந்தால், அவர்கள் நீதிமன்றத்தின் முன் தோன்றி தங்களின் நிரபராதித் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டவர்களின் கைது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் […]
மிசிசாகாவில் கொள்ளை முயற்சியின் போது பெண் மீது தாக்குதல்: சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை

கனடா, மிசிசாகா (Mississauga) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற கொள்ளை முயற்சியின் போது, பெண் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை பீல் பிராந்திய காவல்துறையினர் (Peel Regional Police) தீவிரமாகத் தேடி வருகின்றனர். காவல்துறையின் தகவல்படி, அதிகாலை 5:45 மணியளவில் ‘லேக்ஷோர் ரோட் வெஸ்ட்’ (Lakeshore Road West) மற்றும் ‘மிசிசாகா ரோட்’ (Mississauga Road) பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்திலிருந்து அந்தப் பெண் இறங்கிய போது, அறிமுகமில்லாத நபர் ஒருவர் […]
பெற்றோரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் எட்டோபிகோக் (Etobicoke) பகுதி ‘டோர் பெல்’ கேமராவில் சிக்கினார்

தனது பெற்றோரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தேடப்பட்டு வரும் 46 வயதுடைய நபர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தெற்கு எட்டோபிகோக் (Etobicoke) குடியிருப்புப் பகுதியில் ஓடிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள வீடொன்றின் ‘டோர் பெல்’ (Doorbell) பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. CTV நியூஸ் ஊடகத்திற்குக் கிடைத்த அந்தப் பாதுகாப்பு கேமரா காட்சிகளில் இருப்பவர் தேடப்பட்டு வரும் ஜோர்டான் சாங்வின் (Jordan Sangwin) தான் என்பதை பீல் பிராந்திய […]
ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டி எஸ் ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். […]
‘ லாலிபொப் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ‘ படத்தின் தொடக்க விழா

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கும் ‘லாலிபொப் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. ஆர் .செந்தில்நாதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கும் ‘லாலிபொப் ஸ்போர்ட்ஸ் அகாதெமி’ திரைப்படத்தில் யோகி பாபு, மஞ்சுநாத், ரெடின் கிங்ஸ்லி, ரக்ஷிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், வை. ஜி. எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். […]
நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’

தனித்துவமான நடிப்புத் திறன் கொண்ட நடிகர் அருள்நிதி கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அருள்வான்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் கணேஷ் விநாயகன் கதை எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அருள்வான்’. இதில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் , கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ஃபீல் குட் […]
‘முதற்கனல்’ பட டீசர் வெளியீடு

துமுக நடிகர்கள் அஸ்வின் விஸ்வநாதன்- ராஜேஷ் – யோகேஷ்- ராமசாமி – ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘முதற்கனல்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பிரபல தமிழ் திரையுலக தயாரிப்பாளரும், நடிகருமான டி. சிவா வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் ஆர் .வெங்கடரமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முதற்கனல் ‘ திரைப்படத்தின் அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், யோகேஷ் , ராமசாமி, தனுஜா, இலக்கியா, பேபி தாரிகா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கந்த சுவாமி […]