எமது கட்சி மீது எதிர்க்கட்சி அவதூறு ; சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜே.வி.பி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் எமது கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பொய் கூறி எமது கட்சி மீது அவதூறு பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜே.வி.பி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா அமைப்பாளர் வருண ராஜபக்ஷ அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பில், இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சரித் அபேசிங்க என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தொலைபேசி மூலம் அழைத்து, ஜனாதிபதியைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று முற்றிலும் பொய்யானதாகும்.

பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள் மற்றும் இலஞ்ச ஊழல் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்தச் சூழ்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி எந்தளவுக்கு பதற்றமடைந்துள்ளது மற்றும் அரசியல் ரீதியாக வங்குரோத்தடைந்துள்ள என்பதையே இந்த அபாண்டமான குற்றச்சாட்டு காட்டுகிறது. அத்துடன், இவ்வாறான அப்பட்டமான பொய்களைக் கூற வைக்குமளவுக்கு அக்கட்சி கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வருந்தத்தக்கதாகும்.

ஏனைய கட்சிகளுக்கு தங்களின் வெவ்வேறு அரசியல் தேவைகளுக்காக, நபர்களின் பின்னணியை ஆராயாமல் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கலாம். ஆனால், குற்றவாளிகளை எமது கட்சியிலோ அல்லது அரசாங்கத்திலோ இணைத்துக்கொள்ள வேண்டிய எந்தவொரு தேவையும் ஜே.வி.பிக்கு கிடையாது. இவ்வாறான தவறான பிரச்சாரங்கள் மூலம், குற்றச் செயல்களுக்குக் கிடைக்க வேண்டிய சமூகத்தின் அவதானத்தை திசைதிருப்பவும், குற்றவாளிகளைக் காப்பாற்றவும் சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் வீணானவையாகும்.

எனவே, பொய் கூறி எமது கட்சி மீது அவதூறு பரப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் மேற்கொள்ளும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதையும் ஜே.வி.பி உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது என்றுள்ளது.

Pillayan-733199

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

June 30, 2026

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.