பிராம்ப்டனில் வாகனக் கடத்தல்: இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிபந்தனைப் பிணையில் விடுதலை

கனடா, பிராம்ப்டன் (Brampton) நகரின் குவீன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Queen Street East) மற்றும் கோர்வே டிரைவ் (Goreway Drive) பகுதிக்கு அருகே இடம்பெற்ற வன்முறை வாகனக் கடத்தல் (Carjacking) சம்பவம் தொடர்பாக இரண்டு ஆண்கள் மீது பீல் பிராந்திய காவல்துறையினர் (Peel Regional Police) குற்றம் சுமத்தியுள்ளனர். காவல்துறையின் தகவல்படி, கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 2:10 மணியளவில் தம்பதியினர் (ஒரு ஆணும் பெண்ணும்) தங்கள் வாகனத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த போது, முகமூடி […]
தெல்லிப்பழை வைத்தியசாலை நிர்வாகத்தை மேம்படுத்த விசேட குழு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள நிர்வாகத்தினர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும், வைத்தியசாலையில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து தருவதாகவும் அவர் இதன்போது வாக்குறுதியளித்தார். இந்நிகழ்வில் […]
தற்போதைய அரசாங்கம் மீது மக்களின் நம்பிக்கை முற்றாக இல்லாது போயுள்ளது – திலித்
தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது முற்றாக இல்லாது போயுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஊவ பரணகம சர்வஜன சபையை அமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஊவ பரணகம சர்வஜன சபையை அமைத்தல் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவின் தலைமையில் நேற்று நடைபெற்றது. அங்கு தொடர்ந்து […]
கால்வாயில் நபரொருவரின் சடலம் மீட்பு

சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (27) சஹஸ்புர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 55 வயது மதிக்கத்தக்க, 5 அடி 4 அங்குலம் உயரமுடைய, நரைத்த தலைமுடியைக் கொண்ட ஒருவர் எனவும், அவர் இறக்கும் போது கருப்பு […]
சுரேஷ் சலேக்கு பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன – சுரேஷ் சலேவின் மனைவி

சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் கவலை தெரிவித்துள்ள சுரேஷ் சலேவின் மனைவி, “கடந்த புதன்கிழமை சட்டத்தரணி அவரைச் சந்தித்த போது, சுரேஷ் சலே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார். அதில், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஜனாதிபதி, ரவி, ஷானி மற்றும் மேலும் சில அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயத்தை அதிகாரிகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் […]
மனித உரிமைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வேண்டுகோள்

சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகள், அப்பிரகடனத்தை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையம், பாதுகாப்பு பொறுப்புக்கான உலகளாவிய நிலையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், நியூ லைன்ஸ் கற்கைகள் நிலையம், இலங்கையில் சமத்துவம் […]
பிரித்தானிய எரிபொருள் கப்பல் மீது தாக்குதல்

முஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் ஒன்றுக்கு அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் அறிவித்துள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்னரும், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் ஒன்றின் மீதும் இதேபோன்றதொரு […]
உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: 19 பேர் நீக்கம்

உப பொலிஸ் பரிசோதகர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூயில் பயிற்சியைப் பெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 100 பேரில் 19 பேர் சட்டவிரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்த காரணத்தினால், மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “2024 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகர்கள் ஆட்சேர்ப்பை […]