விக்டோரியா பார்க் மற்றும் எக்லிண்டன் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28, 2026) அதிகாலையில் ஸ்கார்பரோவில் (Scarborough) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் எக்லிண்டன் அவென்யூ ஈஸ்ட் (Victoria Park Avenue and Eglinton Avenue East) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, டொராண்டோ காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். CP24 செய்தி நிறுவனத்திற்கு அதிகாரிகள் […]

எங்கள் ஆட்சியின் அங்கமாக இருந்தும் விமர்சனம் செய்யலாமா? திருமாவளவனுக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. கேள்வி

‘சென்னை: தமிழக அரசியலில் ஆளும் கூட்டணிக்குள்ளேயே ஒரு கசப்பான சூழல் உருவாகியுள்ளது. சட்டமன்றத்தில் விஜய் மற்றும் ஸ்டாலின் விவாதங்களுக்குத் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எம்.எஸ். முஸ்தபா அவருக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். கூட்டணியில் அங்கமாக இருந்துகொண்டு, விமர்சனங்களை முன்வைப்பது எந்த வகை அரசியல் மரபு என்று அவர் கேட்டுள்ள கேள்வி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தவெக-விற்கும் இடையிலான பிளவை வெளிப்படுத்தியுள்ளது. தனது தலைவரின் ஆட்சியின் மீது வைக்கும் விமர்சனங்கள், […]

சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை: உதயநிதி விமர்சனம்

‘தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். சட்டமன்றத்தை ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டாக ஆளுங்கட்சி மாற்றிவிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஆளுங்கட்சியின் இத்தகைய பொறுப்பற்ற போக்கு தமிழகத்தின் ஜனநாயக மதிப்பைக் குறைப்பதாகக் கூறினார். சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்குப் பதில் அளிக்கத் தெரியாத முதலமைச்சர், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்த்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். […]

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய Cardiac Catheterisation Lab மற்றும் நவீன Echo இயந்திரம் கையளிப்பு.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப்  பிரிவில் உள்நோயாளர் விடுதிகள், வெளிநோயாளர் கிளினிக், இதய எக்கோ (Echocardiography) சேவை மற்றும் இதய இரத்த நாளங்களைப் பரிசோதித்து சிகிச்சையளிக்கும் Cardiac Catheterisation Laboratory (Cath Lab) ஆகியவை சிறப்பாக இயங்கி வருகின்றன.கடந்த இரண்டு தசாப்தங்களாக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறது. எனினும், காலத்தின் தேவைக்கேற்ப புதிய Cath Lab மற்றும் நவீன Echo இயந்திரம் ஆகியவை அவசியமாக இருந்தன. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்,  சுகாதார மற்றும் […]

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிஜயம்!!

சுகாதார அமைச்சர்  நளிந்தஜயதிஸ்ஸ இன்றையதினம்(28/06) நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டார். நேற்றையதினம் (27/06) இரவு சுகாதார அமைச்சர் அடங்கிய குழுவினர் கடற்படை படகு மூலம் நெடுந்தீவுக்கு வந்து தங்கிநின்று இன்றையதினம் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு களவிஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்து சென்றுள்ளனர் விஜயத்தின்போது வைத்தியசாலைப் வைத்திய அதிகாரி , தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நிர்வாக மற்றும் ஏனைய ஊழியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து அமைச்சரை வரவேற்றனர். அங்கு அவர் […]

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுவிஸ் தூதுவருடன் சந்திப்பு!

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் இயங்கிவரும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற்றுக்கும் இடையே கடந்த வியாழனன்று (25) கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக அறியமுடிகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய வாக்குறுதிகளை வழங்கியிருந்த பின்னணியில், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்களில் […]

அரசாங்கம் தேசிய சூழலியல் (திருத்தச்) சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றாமை தவறு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டு

அரசாங்கத்தினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழலியல் (திருத்தச்) சட்டத்துக்கு அதற்கு முன்பதாகவே மாகாணசபைகளின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கவேண்டும். அதனூடாகவே சாதாரண பெரும்பான்மையுடன் அச்சட்டத்தை நிறைவேற்றமுடியும். இருப்பினும் தற்போது மாகாணசபைகள் இயங்குநிலையில் இல்லாத காரணத்தினால், அவற்றால் ஒப்புதல் வழங்கமுடியாத நிலையில், இச்சட்டத்தை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால் அதற்குப் புறம்பாக சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றியமை முற்றிலும் தவறாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபைக்கான […]

கூட்டணி இல்லாமல் எதிர்காலத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிப்பது கடினம்; திருமாவளவன்

‘சென்னை: தி.மு.க. இனிவரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட வேண்டும் என ஆ.ராசா முன்வைத்த கருத்து, அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து கூறியுள்ளார். கூட்டணி பலம் இல்லாமல் தி.மு.க.-வால் எதிர்காலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பது அல்லது மீண்டும் அதிகாரத்திற்கு வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். 60 இடங்களில் வெற்றி பெற்றதே கூட்டணிக் கட்சிகளின் கூட்டு முயற்சியால் […]

யாழ்.தொல்புரத்தில் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளான 29 வயதுடைய ஆணொருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (27) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கத்தி குத்து தாக்குதல்  ஒன்று  சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வயிற்றில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபரை முன்பதாக […]

தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஏன் அவசியம்? ; பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் என்பவற்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்pன் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸ{க்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த […]