சுகாதார அமைச்சர் நளிந்தஜயதிஸ்ஸ இன்றையதினம்(28/06) நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
நேற்றையதினம் (27/06) இரவு சுகாதார அமைச்சர் அடங்கிய குழுவினர் கடற்படை படகு மூலம் நெடுந்தீவுக்கு வந்து தங்கிநின்று இன்றையதினம் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு களவிஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்து சென்றுள்ளனர்
விஜயத்தின்போது வைத்தியசாலைப் வைத்திய அதிகாரி , தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நிர்வாக மற்றும் ஏனைய ஊழியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து அமைச்சரை வரவேற்றனர்.
அங்கு அவர் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்தார். அங்கு வைத்தியசாலையின் தேவைவைப்பாடுகள் அங்கு இருக்கும் நோயாளர்கள், மருந்து தேவைகள் அதன் இயங்கு நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்
குறித்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந.பிரபாகரன், பொது சுகாதார பரிசோதகர் , கடற்படை அதிகாரிகள், அழைக்கப்பட்ட முதியோர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்