யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய Cardiac Catheterisation Lab மற்றும் நவீன Echo இயந்திரம் கையளிப்பு.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப்  பிரிவில் உள்நோயாளர் விடுதிகள், வெளிநோயாளர் கிளினிக், இதய எக்கோ (Echocardiography) சேவை மற்றும் இதய இரத்த நாளங்களைப் பரிசோதித்து சிகிச்சையளிக்கும் Cardiac Catheterisation Laboratory (Cath Lab) ஆகியவை சிறப்பாக இயங்கி வருகின்றன.கடந்த இரண்டு தசாப்தங்களாக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறது.
எனினும், காலத்தின் தேவைக்கேற்ப புதிய Cath Lab மற்றும் நவீன Echo இயந்திரம் ஆகியவை அவசியமாக இருந்தன. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்,  சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் இவ்விரு நவீன உபகரணங்களும் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, பொறியியல் சேவைகள் மேலதிக செயலாளர் டாக்டர் சலிந்த பண்டார, திட்டமிடல் பிரதி பணிப்பாளர் நாயகம் (DDG Planning) டாக்டர் ஸ்ரீதரன், மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவு வடக்கு மாகாண மக்களுக்கு மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கும் உயர்தர சிகிச்சை வழங்கி வருகிறது.
இந்த புதிய Cath Lab மற்றும் நவீன Echo இயந்திரத்தின் மூலம், இருதய நோய்களை மேலும் துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிந்து, உயர்தரமான உயிர்காக்கும் சிகிச்சைகளை வழங்குவதற்கான திறன் மேலும் வலுப்பெறும். இது வடக்கு மக்களுக்கும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து சிகிச்சை பெற வருவோருக்கும் பெரும் பயனை அளிக்கும்.
கௌரவ சுகாதார அமைச்சர் அவர்கள் இருதய சிகிச்சைப் பிரிவின் சேவைகள் குறித்து விரிவாக அறிந்து கொண்டதுடன், அப்பிரிவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை மனமாரப் பாராட்டினார்
trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட