தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டி எஸ் ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பேச்சு வார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நிலையில்… பேச்சு வார்த்தைக்கு முரணாக ஈகோ – கோபம் ஆகியவற்றை கடைபிடித்தால்… இழப்புகள் தான் அதிகமாகும். இந்த விடயத்தை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறோம். ’96’ படத்திற்கு பிறகு ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடியின் ‘ஸ்கிரீன் மேஜிக்’ இந்த படத்தின் ஹை லைட் ” என்றார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில்.. இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஆகியோரது தோற்றம்… அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.