துமுக நடிகர்கள் அஸ்வின் விஸ்வநாதன்- ராஜேஷ் – யோகேஷ்- ராமசாமி – ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘முதற்கனல்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பிரபல தமிழ் திரையுலக தயாரிப்பாளரும், நடிகருமான டி. சிவா வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ஆர் .வெங்கடரமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முதற்கனல் ‘ திரைப்படத்தின் அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், யோகேஷ் , ராமசாமி, தனுஜா, இலக்கியா, பேபி தாரிகா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கந்த சுவாமி கோபால் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மீரா லால் இசையமைத்திருக்கிறார். போதை பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கங்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் படம் மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள்- போதை பொருளை பாவிக்கும் வளர் இளம் பருவத்தினரின் மனநிலையை துல்லியமாக விவரிப்பதால்… படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.