வாழ்க்கைச் சுமை அழுத்துவதால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்…

இலங்கையில் வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல், மக்கள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து பின்னர் அதனை மீட்க முடியாமல் திண்டாடுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடகு வைக்கப்படும் நகைகளை மக்களால் மீட்க முடியாத நிலையில் அவை வங்கிகளுக்குச் சொந்தமாகும் நிலை காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் இன்றைய சமூகத்தில், பெரும்பாலான மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறியுள்ளது. மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர்.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இரண்டு வேளை உணவு மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் மாதாந்தம் குறைந்தபட்சம் 94,945 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. ஆனால் அந்தக் குடும்பத்தின் வருமானம் 75,882 ரூபாவாகவே உள்ளது.

இந்த இடைவெளியை மக்கள் கடன் பெற்றே சமாளிக்கின்றனர். வாழ்க்கைச் செலவு மாதந்தோறும் கண்முன்னே மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கமாகும்.

எமது நாட்டு மக்களுக்கு தற்போது நடைமுறைச் சாத்தியமான நலன்புரித் திட்டங்கள் அவசியமாக உள்ளன. இலங்கையில் நடைமுறையில் உள்ள முக்கியன நலன்புரித் திட்டம் அஸ்வெசும ஆகும். ஆனால், அதற்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட அதே அளவில் பேணாமல் குறைத்துள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அஸ்வெசும திட்டத்திற்காக 231 பிலிலியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய வரவு செலவுத்திட்டத்தில் அந்த ஒதுக்கீடு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

இன்று மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் அளவை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தங்க நகைகள், மோதிரங்கள் மற்றும் மாலைகள் போன்றவற்றைக் கூட அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வேறு வழியில்லாத காரணத்தினால், குடும்பத்திற்கான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தங்களிடம் உள்ள நகைகளை அடகு வைக்கின்றனர்.

ஆனால், உரிய காலத்திற்குள் பணத்தைச் செலுத்தி அந்த நகைகளை மீட்டுக்கொள் முடியாததால், அவை வங்கிகளுககுச் சொந்தமாகி விடுகின்றன.

அதன் பின்னர் வங்கிகள் அறிவித்தல்களை வெளியிட்டு, அவ்வாறு தம்வசமான நகைகளைப் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்கின்றன. இவ்வாறான செய்திகள் தற்போது பத்திரிகைகளில் அதிகளவில் வெளியாகி வருகின்றன. இத்தகையதொரு நிலைமையே தற்போது எமது நாட்டில் உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

gl

வாழ்க்கைச் சுமை அழுத்துவதால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்…

November 25, 2026

இலங்கையில் வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல், மக்கள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து பின்னர் அதனை மீட்க முடியாமல்

raj

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு பிடியாணை

November 25, 2026

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்குப்

Chand

மீனவர் பிரச்சினை: புதுடில்லியில் ஜனவரியில் பேச்சு

November 25, 2026

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இரு நாடுகளினதும் அதிகாரிகள்

922781602_1124352817138088_5660692993300676305_n

வடக்கு மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு: பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை!

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

photo-collage.png (1)

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தலும், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று நவம்பர் 24ஆம் திகதி

jo

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்

November 25, 2026

சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு

922781602_1124352817138088_5660692993300676305_n

வட மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு?

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

chemmani-gates

எலும்புக்கூடுகளைத் ‘தொற்றுநோய்’ என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்

November 25, 2026

மோகனதாரணி மயூரன்- ஈழ மண்ணின் வரலாற்றில் ஆறாத வடுக்களாகத் தொடரும் மனித உரிமை மீறல்களின் வரிசையில், செம்மணி புதைக்குழி குறித்த

dsfs

முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோகத்தருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தாயக விடுதலைக்காகத் தமது பிள்ளைகளை உகந்தழித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்களைக் மதிப்பளிப்பு நிகழ்வு நேன்று 24.11.2026

WhatsApp Image 2026-11-25 at 15.36.37

கிளிநொச்சியில் மீண்டும் எழுந்தது மாவீரர் நினைவு வளைவு!

November 25, 2026

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடாவடித்தனமாகக் கழற்றி எடுத்துச் செல்லப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது

ipl

2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

November 25, 2026

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் ஏழு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ha

ஆடைக் கடையில் கொள்ளை

November 25, 2026

ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து இடம்பெற்று வரும் உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், நகர