தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க சர்வதேசச் சதிக் குற்றம் – இலங்கையருக்கு கேரள நீதிமன்றம் பிணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அஸ்மின் என்ற இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர்நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளான ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, என்.ஐ.ஏ (NIA) சிறப்பு நீதிமன்றத்தினால் மன்னிப்பு வழங்கப்பட்டு அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட குறித்த நபரைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது எனத் தெரிவித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பிணை […]
நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு?

பணம் அச்சிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த கால அரசாங்கங்கள் பணம் அச்சிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தற்போது பணம் அச்சிடப்படவில்லை என்றால் பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணத்தைப் பொதுமக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி சரியான பொருளாதார முன்னறிவிப்புகளை மேற்கொண்டு, […]
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமூலம்; கலந்துரையாடல்?

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு வெளியில் ஜனாதிபதி தலைமைத்துவத்தில் பரந்துப்பட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்த வேண்டும் என சிவில் தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளனர். ஆளுகை,நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் திங்கட்கிழமை (23) பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் […]
பாடசாலை மாணவி வன்புணர்வு: பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறை
பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் Sub-Inspector of Police ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியுமான லால் ரணசிங்க பண்டார, பிரதிவாதிக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து […]
இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த சீனா உதவி

இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவளிக்கவுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சிக்கலான குற்றச் செயல்கள் மற்றும் உருவாகிவரும் புதிய குற்ற முறைகளைப் […]