மீனவர் பிரச்சினை: புதுடில்லியில் ஜனவரியில் பேச்சு

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு விவகாரமாகும். இதற்கு நிரந்தரமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதில் எமது அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் மட்டங்களில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் அங்கமாக, எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இலங்கைக் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவுக்குச் சென்று, அந்நாட்டுக் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியா – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் (Joint Working Group – JWG) கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்படவுள்ளன.

குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துதல், இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான வழிமுறைகள் ஆராயப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் இலங்கைத் தரப்பிலிருந்து கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், இலங்கைக் கடற்படை, இலங்கைப் பொலிஸ், கடலோரக் காவல்படை, தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் மூலம், சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் பங்களிப்புடன் பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடைபெற்ற இந்திய – இலங்கை கடற்றொழில் கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தில் இந்தியத் தரப்பிலிருந்து கடற்றொழில் செயலாளர் தலைமையிலான குழுவினர், கடற்படைப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இக்கூட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் தமிழக அரச தரப்பினரும் இவ்விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அனைத்துத் தரப்பினருடனும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை எட்டுவதற்கு எமது அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்” என்றார்.

raj

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு பிடியாணை

November 25, 2026

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்குப்

Chand

மீனவர் பிரச்சினை: புதுடில்லியில் ஜனவரியில் பேச்சு

November 25, 2026

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இரு நாடுகளினதும் அதிகாரிகள்

922781602_1124352817138088_5660692993300676305_n

வடக்கு மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு: பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை!

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

photo-collage.png (1)

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தலும், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று நவம்பர் 24ஆம் திகதி

jo

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்

November 25, 2026

சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு

922781602_1124352817138088_5660692993300676305_n

வட மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு?

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

chemmani-gates

எலும்புக்கூடுகளைத் ‘தொற்றுநோய்’ என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்

November 25, 2026

மோகனதாரணி மயூரன்- ஈழ மண்ணின் வரலாற்றில் ஆறாத வடுக்களாகத் தொடரும் மனித உரிமை மீறல்களின் வரிசையில், செம்மணி புதைக்குழி குறித்த

dsfs

முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோகத்தருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தாயக விடுதலைக்காகத் தமது பிள்ளைகளை உகந்தழித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்களைக் மதிப்பளிப்பு நிகழ்வு நேன்று 24.11.2026

WhatsApp Image 2026-11-25 at 15.36.37

கிளிநொச்சியில் மீண்டும் எழுந்தது மாவீரர் நினைவு வளைவு!

November 25, 2026

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடாவடித்தனமாகக் கழற்றி எடுத்துச் செல்லப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது

ipl

2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

November 25, 2026

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் ஏழு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ha

ஆடைக் கடையில் கொள்ளை

November 25, 2026

ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து இடம்பெற்று வரும் உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், நகர

m

நிலவைச் சுற்றி பிரம்மாண்ட சூரிய மின்தகடு வளையத்திலிருந்து அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்?

November 25, 2026

நிலவைச் சுற்றி 6,800 மைல் (சுமார் 11,000 கிலோமீற்றர்) நீளத்திற்கு அமைக்கப்படும் சூரிய மின்தகடுகளின் வளையத்தின் ஊடாக, பூமி முழுவதும்