மாவீரர் தினத்தை முன்னிட்டு, தாயக விடுதலைக்காகத் தமது பிள்ளைகளை உகந்தழித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்களைக் மதிப்பளிப்பு நிகழ்வு இன்று 24.11.2026 முள்ளியவளையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
போராளிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவித்து மங்கள வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும், மாவீரர்களின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்கள் மதிப்பளிக்கப்பட்டு பழமரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் போசகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராம மட்டப் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.