உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் டினிப்ரோ, சப்ரோசினியா, சுமி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் சிக்கி சுமார் 40 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
இன்று (30ஆம் திகதி) 1,587வது நாளாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் முதலான உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்த இரு நாட்டு போரையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலேயே நேற்று ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.