மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் இன்று மதியம் அத்துமீறி கத்திகளுடன் சென்று பண்ணையாளர்களை மிரட்டிய சிங்களவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள்.
கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் மேற்படி பகுதியினுல் அத்துமீறி காடு வெட்டி வெளியாக்கி குடிசைகளை அமைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பண்ணையாளர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையில் நிலைமை இன்று
மோசமடைந் துள்ளது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது

 

29.06.2026 மதியம் பண்ணையாளர்களின் இருப்பிடங்களுக்கு கத்திகளுடன் சென்ற சில சிங்களவர்கள் பண்ணையாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட் டியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது அச்சமான சூழ்நிலையில் இன்று மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்களது நிலமை மோசமடைந்து ள்ளது.
கடந்த 1020 வது நாளாக தொடர்ந்து தமது மேச்சல் தரைக்காக அறவழி போராட்டத்தினை நடாத்தி வரும் சூழலில் இதுபோன்ற துண்பகர மான விடயங்கள் பண்ணையாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றதன் காரணத்தினால் பண்ணையாளர்கள் சார்பில் வழக்குகள் போடப்பட்டு குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு நீதிமன்றம் மூலம் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
ஆனாலும் அவர்களில் சிலர் வெளியேற்றப் படாமல் நீதிமன்ற உத்தரவை மீறி குடியிருந்த நிலையில் அப்பகுதிகளில் நடைபெறும் சட்டத்திற்கு புறம்பான செயல்ப்பாடுகளை கண்காணிப்பதற் கென்று பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றும் அமைக்கப்பட் டுள்ளது.
ஆனால் பண்ணையாளர்கள் செல்லும்போது ஒவ்வொருத்தராக ஆள் அடையாள பரிசோதனை செய்யும் பொலிசார் மேற்படி அத்துமீறி பிரவேசிக்கும் சிங்களவர்கள் தொடர்பில் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என பண்ணையாளர்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கின்றனர்.
சென்றவாரம் வாரமும் இதேபோல் சில சிங்களவர்களுடன் கால்நடை பண்ணையாளர்கள் இருப்பிடங்களுக்குச் சென்ற பொலிசார் அந்த இடத்திலிருந்து பண்ணையாளர்கள் வெளியேற வேண்டும் என்ற அழுத்தத்தினை பிரயோகித்திருந்தனர்.
பண்ணையாளர்களின் மற்றும் அவர்களது கால்நடைகளுக்கு பாதுகாப்பு என்ற காரணத்திற்காகத் தான் மேற்படி பொலிஸ் சோதனைச் சாவடி கொண்டு வரப்பட்டது.ஆனால் இன்று பொலிசாரின் கண்காணிப்பிற்கு மத்தியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் காடுகளை அழித்து புற்தரைகளைச் சேதப்படுத்தி தீவைத்து அழித்து நாசமாக்கி சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குடிசைகளை அமைத்து வருகின்றனர்.

fif

பீஃபா உலகக் கிண்ணம்: வரலாற்றில் திருப்புமுனை

June 30, 2026

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம்

is

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் – 12 பேர் பலி

June 30, 2026

உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர்

Prakeeth eg

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்!

June 30, 2026

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ்

arrest1

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது

June 30, 2026

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா

735222791_1379752507417719_221386906937767859_n

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் இன்று மதியம் அத்துமீறி கத்திகளுடன் சென்று பண்ணையாளர்களை மிரட்டிய சிங்களவர்கள்

June 30, 2026

மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள். கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்

Pillayan-733199

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

June 30, 2026

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்