சென்னை:
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல், விஜய்யின் எதிர்காலம் குறித்துப் பல அதிரடி கணிப்புகளை வெளியிட்டுள்ளார். “விஜய் வெறும் முதலமைச்சர் மட்டுமல்ல, பிற்காலத்தில் இந்தியப் பிரதமராகும் யோகம் அவருக்கு உண்டு” என அவர் தெரிவித்துள்ளார்.
தனது பதவி ரத்து செய்யப்பட்டது குறித்துப் பேசிய ரத்தன் பண்டிட், “எனக்குப் பதவி வழங்கப்பட்டதே முதலில் தெரியாது. ரத்து செய்யப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை, விஜய்யின் அன்பு வட்டத்தில் இருப்பதே எனக்குப் போதும். விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும், அவர் ஒரு தீவிர முருக பக்தர். 2016-லேயே விஜய்க்கும் அஜித்துக்கும் அரசாளும் யோகம் இருப்பதாகக் கூறினேன். அஜித் தரப்பில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் விஜய் இன்று முதலமைச்சராகிவிட்டார்” எனக் கூறினார்.
மேலும், பிரதமர் மோடியுடன் விஜய்யை ஒப்பிட்டுப் பேசிய அவர், “பிரதமர் மோடியின் ஜாதகத்தில் உள்ள சிறப்பம்சங்கள் அப்படியே விஜய்யின் ஜாதகத்திலும் உள்ளன. மோடி ஏற்படுத்தப்போகும் வெற்றிடத்தை நிரப்பப்போகும் அதிர்ஷ்டசாலி விஜய் தான். அடுத்த 40 முதல் 50 ஆண்டுகளுக்குப் போட்டியே இல்லாத தலைவராக விஜய் விளங்குவார். அவர் உலகமே போற்றும் தலைவராகவும், இந்தியாவின் பிரதமராகவும் உயர்வார்; அவருக்குத் தோல்வி என்பதே கிடையாது” எனத் தனது கணிப்பைத் தெரிவித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய சிறப்பு அதிகாரி நியமன விவகாரத்தைத் தொடர்ந்து ஜோதிடரின் இந்தப் பேச்சு வைரலாகி வருகிறது.
#VijayAsCM #RathanPandit #AstrologyPrediction #ModiVsVijay #TVK_Government #BreakingNews #May14 #TamilNaduPolitics #FuturePM #ThalapathyVijay #NewGovernmentTN #AstroUpdate #PoliticalFuture #VijayMakkalIyakkam #TamilNews #Leadership #SuccessStory #SpiritualPolitics #VijayFans #CM_Vijay_Official_“`